திருப்பரங்குன்றம்.. பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. திமுக வேட்பாளர் சரவணன்

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட, திமுக சார்பில் வேட்பாளராக அநிவிக்கப்பட்டுள்ள சரவணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து மேற்கண்ட 4 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது.

Thiruparankundram by-election..DMK candidate Saravanan filed a nomination

வரும் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட முக்கிய திமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற சரவணன் தனது வேட்புனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஐ. பெரியசாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணன் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றார்.

மே 3 மற்றும் 4 தேதிகளில், திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சரவணன் தாம் இந்த இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+