பாஜக ரூட் கிளியர்.. திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும் மோடி! பக்கா ஸ்கெட்ச்!
மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் பேசு பொருளாக மாறியிருக்கும் நிலையில், மார்ச் 1ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் தர்காவுக்கு பக்கத்தில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படி இருக்கையில், பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்து அமைப்புகளும் வாக்கு வங்கியும்
வடமாநிலங்களை பொறுத்தவரை பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிப்பது இந்து அமைப்புகள்தான். இந்து அமைப்புகளின் பேச்சுக்களும், நோக்கங்களும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்காவுக்கு அடியில் கோயில் இருக்கிறது, மசூதிக்கு அடியில் ராமர் சிலை இருக்கிறது என்கிற பேச்சுக்களும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் தொடுத்திருக்கும் வழக்குகளும் சலசலப்பை கிளப்பி வந்திருக்கின்றன.
திருப்பரங்குன்றமும் பாஜகவும்
இப்படி செய்வது, இந்து மக்களிடையே மத உணர்வை கூர்மைப்படுத்தி, அவர்களை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கைதான் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. திருப்பரங்குன்றம் விஷயத்திலும், பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நடவடிக்கை இதேபோலத்தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிரச்சனை யாரால்?
திருப்பரங்குன்றத்தில் வேறொரு இடத்தில் தீபம் ஏற்றுவது என்ற கோரிக்கை, பக்தர்களால் எப்போதுமே முன் வைக்கப்பட்டதில்லை என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறியுள்ளன. மேலும், பக்தர்கள் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் பல்லாண்டுகளாக தீபம் ஏற்றி வரு வதை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளனர் என்றும், இதற்கு மாறாக, மதத்தைப் போர்வையாகக் கொண்டு அரசியல் நோக்கத்துடன் இயங்கக் கூடிய சில அமைப்புகளால் பிரச்சனை எழுப்பப்பட்டது என்றும் கூறுகின்றன.
அறுவடை செய்யும் பாஜக
தீப விவகாரத்தின்போது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பேசியிருந்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்புகளும், இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் கோரும் கல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது வட மாநிலத்தில் இந்து அமைப்புகள் எப்படி பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த முயன்றதோ, அதேபோல இங்கும் அந்த அமைப்புகள் தீவிரமாக பணியாற்றியுள்ளது தெளிவாகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது மோடி திருப்பரங்குன்றத்தில் தரிசனம் மேற்கொள்வதால், இந்த இந்து அமைப்புகள் திரட்டி வைத்திருந்த வாக்கு வங்கியை பாஜக அறுவடை செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின்












Click it and Unblock the Notifications