Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை மேல்முறையீடு மனு விசாரணைக்கு வருது.. டைம் கொடுங்கள்.. நீதிபதி சுவாமிநாதனிடம் தமிழக அரசு வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை வரை டைம் கொடுங்கள் என்று மதுரை உயர் நீதிமன்ற பென்ச் தனி நீதிபதி சுவாமிநாதனிடம் தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீடு மனு விசாரணைக்கு வருகிறது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீடு விசாரணைக்கு வரும் வரை இதில் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் - நீதிபதி சுவாமிநாதன் வழக்கு

இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் காட்டமாக கேள்விகளை எழுப்பினார், அதில், நீதிபதிகளிடம் ரவுத்திரம் பழக வேண்டாம். என்னுடைய தீர்ப்பால் யாருக்கும் பிரச்சனை இல்லையே. நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்கவில்லை. மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் யார் ஆஜராகி உள்ளீர்கள்? திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகி உடனே நேரில் ஆஜராக வேண்டும், என்றார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்க வேண்டும். உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும். 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்; சட்டப்படி உரிய பதில் அளிப்போம், என்று இதில் தமிழக அரசு வாதம் வைத்தது.

Thiruparankundram temple row Give time till tomorrow as appeal coming says TN Govt to Swaminat

4 வாரம் நேரம் கொடுத்தால் மட்டும் என்ன செய்வீர்கள், நீதிபதி சுவாமி நாதன் பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக அரசு, நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம்.

10 நிமிடத்திற்குள் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகி உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று சொல்வது சரியா? என்று கேட்டனர். அதற்கு நீதிபதி சுவாமிநாதன், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் நேரில் வர வேண்டாம்.. ஆன்லைனில் ஆஜராக சொல்லுங்கள்.. சீருடையில் இல்லை என்றாலும் அவர்களை நேரில் ஆஜராக வேண்டாம்.. ஆன்லைனில் ஆஜராக சொல்லுங்கள் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.

திருப்பரங்குன்றம் - வழக்கு என்ன நடந்தது இதுவரை?

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

அரசு கடமையை செய்ய தவறி உள்ளது. அரசு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோன்றுகிறது. மத சடங்குகளை தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. யாருக்கும் இடையூறு இல்லாமல் தீபம் ஏற்றுவதை அனுமதிப்பதில் என்ன சிரமம், என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இரண்டு நீதிபதிகள் அமர்வு இதில் முக்கியமான கேள்விகளை எழுப்பியது. அதில், மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஏதும் செய்யவிடாமல் தடுப்பது அல்ல, இரு தரப்பு இணைந்து இணக்கமாக செயல்படுத்த நல்லிணக்கம். இரண்டு தரப்பு மற்ற தரப்பு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிபதி சுவாமிநாதன் யாரையும் தண்டிக்கவில்லையே. கோவில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால்தான் நீதிபதி சுவாமி நாதன் CISF படையை அழைத்து செல்ல உத்தரவிட்டார். மற்றபடி நீதிபதி யாரையும் தண்டிக்கும்படி உத்தரவிடவில்லையே, என்று மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+