என்ன இவங்கதான் உங்க கணவரா? திருப்பரங்குன்றத்தை திகைக்க வைத்த வேட்பாளர்.. திமுகவே இதை எதிர்பார்க்கலை!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பொன்னுத்தாயி பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 173 இடங்களில் போட்டியிடுகிறது. திமுகவின் உதய சூரியன் சின்னம் 187 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக அறிவித்துள்ள 173 வேட்பாளர்களில் பல படித்தவர்களாவும் , சில எளிமையான பின்னணியை கொண்டனவர்களாகவும் உள்ளனர். சில புது முகங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுமே மிகவும் எளிமையான வேட்பாளர்களை தேர்தலுக்காக களமிறக்கி உள்ளது. திமுக கூட்டணியில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.சீனிவாசன் (57) அறிவிக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக சிபிஎம் உறுப்பினராக இருக்கும் இவர்.. மிகவும் எளிமையான பின்னணி கொண்டவர்.

பின்னணி
இன்னொரு பக்கம் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பொன்னுத்தாயி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் மிகவும் எளிமையான பின்னணி கொண்டவர். நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த பொன்னுத்தாயி .. அங்கிருந்த ஆட்டோவில் ஏறி சென்று மக்களிடம் வாக்கு கேட்டது பெரிய அளவில் வைரலானது.

ஆச்சர்யம்
வேக வேகமாக வந்து இவர் ஆட்டோவில் ஏறி சென்றதை பலரும் தேர்தலுக்கான ஜிம்மிக்ஸ் என்றுதான் நினைத்தார்கள்.. இதெல்லாம் பல வேட்பாளர்கள் ஏற்கனவே செய்துவிட்டனர் என்று சிலர் கிண்டலும் செய்தனர்... ஆனால் கடைசியில் பார்த்தால் அந்த ஓட்டுனர் வேட்பாளர் பொன்னுத்தாயின் கணவர்தானாம். ஆம் இவர்களின் குடும்ப மிக மிக எளிமையான பின்னணியை சேர்ந்தது.

கணவர்
கணவர் கருணாநிதி ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்.. மனைவி பொன்னுத்தாயி மக்களுக்காக களமிறங்கி தீவிரமாக கட்சி பணிகளை செய்து வருகிறார். கட்சிக்குள் இவருக்கு இருக்கும் ஆதரவாலும், மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் நல்ல மதிப்பாலும் சிபிஎம் கட்சி இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

முதல் முறை
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக முதல் முறையாக இவர் களம் காண்கிறார். திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் சரவணன் தொகுதியாகும் இது. இதில் பொன்னுத்தாயி மதுரையின் முன்னாள் மேயராக இருந்த வலிமையான அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

வலிமை
இதனால் பொன்னுத்தாயி பிரசாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இவ்வளவு எளிமையான வேட்பாளரை களமிறக்கியதை பார்த்து திமுகவும் உற்சாகத்தில் இருக்கிறதாம். இப்படிபட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணியில் இடம்பெறுவது நமக்குத்தான் நல்ல பெயரை ஏற்படுத்தும் என்றும் இது உண்மையில் சிறப்பான தேர்வு என்றும் திமுகவும் உற்சாகத்தில் உள்ளதாம்.

நல்ல வாய்ப்பு
பொன்னுத்தாயி போன்ற எளிமையான பின்னணியிலும் மக்களுக்காக சேவை செய்பவர்கள்.. அதிலும் முக்கியமாக பெண்கள் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆதரவு அளிக்கப்பட வேண்டியவர்கள். பொன்னுத்தாயி தேர்தலில் வெற்றிபெறுவாரா இல்லையா என்பதை தாண்டி .. பொன்னுத்தாயின் இந்த வருகையே ஒரு வெற்றியாகத்தான் பார்க்கப்பட வேண்டும்!
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications