வருங்கால அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தீர்மானிக்கும்.. மதுரையில் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: வருங்கால அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தீர்மானிக்கும் என மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தைகள். இதற்காக மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் வெற்றி விழாவில் கட்சி தொண்டர்களிடையே திருமாவளவன் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் பல்வேறு நெருக்கடிகளை கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் தாக்குப்பிடித்திருப்பதே இமாலய சாதனை.

அரசியல்

அரசியல்

மக்களோடு மக்களாக இணைந்து பயணிக்கிற அரசியல்தான் கட்சிக்கு நல்லது. இனி தேர்தல்களை புறக்கணிக்காமல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். விசிக அரசியல் பயணம் நீண்ட கால பயணம் என்பதால்தான், சட்டசபைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் நின்று தனித்தன்மை காக்க நினைத்தேன்.

காலம் காலமாக

காலம் காலமாக

திருமாவளவன் என்கிற அடையாளம் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக உள்ளது என்பதை கூட்டணியில் இணைப்பதை கூட ஒரு காலத்தில் கேள்விக்குறியாக்கினார்கள். எம்எல்ஏ ஆக வேண்டும். எம்பி ஆக வேண்டும் என நான் அரசியலுக்கு வரவில்லை.

வருங்கால அரசியல்

வருங்கால அரசியல்

மக்களை அரசியல்படுத்தவே வந்தேன். வருங்கால அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தீர்மானிக்கும். பரந்துபட்ட அளவில் உழைக்கும் வெகுமக்களை அரசியல்படுத்துவதன் மூலமே காலப்போக்கில் சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்க முடியும்.

அரசியல் களத்தில்

அரசியல் களத்தில்

அந்த நம்பிக்கையுடன் அரசியல் களத்தில்..
ஊக்கம் குன்றாமல் உறுதியுடன் உழைப்போம். உழைக்கும் வர்க்கத்தை அரசியல் படுத்துவோம் என தொல் திருமாவளவன் மதுரையில் பேசியுள்ளார். சனாதன சக்திகளுக்கு எதிராக தமிழக தேர்தல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மிக முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+