சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், முருகன் உள்பட 9 காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் லாக்டவுன் விதிகளை மீறியதாக கூறி காவல்துறையினர் அழைத்து சென்றனர். காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

Thoothukudi custodial deaths: CBI files charge sheet

நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ஏட்டு முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+