குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் இன்று முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற்று பரவசம் அடைந்தார்கள்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் ஜருராக தொடங்கியது..

அசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன்னுடைய மகள் தெய்வானையை, இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்றுதான் கல்யாணம் செய்து தந்தார்.. அதனால்தான், இந்த திருநாளே பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்படுகிறது.
முருகன் கோவில்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுசிறப்பாக தொடங்கியது.. இந்த விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து 15 நாட்களுக்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
முன்னதாக நேற்றிரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்த பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் இன்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெற்றது.
பட்டாபிஷேகம்: இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டு வந்தார்கள்..
ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.. அப்போது, ஏராளமான பெண்களும் தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்... மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனமும் செய்தார்கள்..
தெய்வானை: நாளை அதாவது 29ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.. நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். இதனால் நாளைய லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மார்ச் 30ம் தேதி தீர்த்தம் பூஜையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications