மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வாங்கிய பாஜக தலைவர் அண்ணாமலை!
மதுரை: மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார்.

அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். முல்லை பெரியாறு அணையில் 139 அடி வரைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் 136 அடியில் அணையை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அத்துடன் இடதுசாரிகளுடனான கூட்டணியால் கேரளாவிடம் தமிழக அரசு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறதா? முல்லை பெரியாறு அணை குறித்து ஏன் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்? என்றும் கேட்டிருந்தார் அண்ணாமலை. புதிய கல்வி கொள்கையில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளது; அதை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை ஆதீனத்துக்கு அண்ணாமலை சென்றார். மதுரை ஆதீனமானது திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்டது. இதன் 292-வது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து அண்மையில் காலமானார். இதனையடுத்து 293-வது ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். அப்போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர் ஆதீனம், குன்றக்குடி, திருப்பனந்தாள், சிரவை ஆதீனம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்று மதுரை புதிய ஆதீனத்திற்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
இன்று ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை அண்ணாமலை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இது தொடர்பான படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அண்ணாமலை, 1300 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் பழமையான மடங்களுள் ஒன்று மதுரை ஆதீனம் என குறிப்பிட்டுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications