முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தது.. திண்டுக்கல் டூ மதுரை செல்லும் வழியில் பரபரப்பு
மதுரை: மதுரை அருகே சென்றபோது முதல்வர் ஸ்டாலினின் கார் டயர் வெடித்தது. திண்டுக்கல்லில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய போது காரின் டயர் வெடித்தது. கார் டயர் வெடித்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் வேறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மதுரைக்கு தனது காரில் பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.

மதுரை நோக்கி முதல்வரின் கார் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் முதல்வரின் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. உடனடியாக காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
உடனடியாக வேறு காரில் அங்கிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். திருமங்கலம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது முதல்வரின் கார் டயரை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. கார் டயர் மாற்றப்பட்டதும் அங்கிருந்து கார் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்படுகிறது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications