Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை செல்லும் மக்களே.. இந்த ரூட்ல போய்டாதீங்க.. முதல்வர் வருகையால் இன்று மேஜர் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதையொட்டி, மதுரை மாநகரில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனால், மதுரை மாநகரில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்படுகிறது.

Madurai traffic mk stalin

கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய வழித் தடங்கள்: கப்பலூர் பாலத்திலிருந்து, அருப்புக்கோட்டை சாலை சந்திப்பு, மண்டலோ நகர், மேலூர் வழியாக திருச்சி செல்ல அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூர் வழியாக திருச்சி, சென்னை நோக்கிச் செல்லக் கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூர் சந்திப்பிலிருந்து தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூர் சாலை சந்திப்பு, வாடிப்பட்டி சாலை சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை வழியாகச் செல்ல வேண்டும்.

அருப்புக்கோட்டையிலிருந்து மண்டலோ நகர் வழியாக செல்லக் கூடிய அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து கப்பலூர் பாலம் சென்று, அங்குள்ள சுற்றுச் சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூர் சாலை சந்திப்பு, வாடிப்பட்டி சாலை சந்திப்பு, திண்டுக்கல் மணப்பாறை வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூர் வழியாக தனிச்சியம் பிரிவு சாலை சந்திப்புக்குச் சென்று, இடது புறம் திரும்பி சமயநல்லூர், துவரிமான், கப்பலூர் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து மேலூர் வழியாக மதுரை பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லக் கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாகச் செல்ல வேண்டும்.

பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள்: மேலூர் நான்கு வழிச் சாலையில் விவசாயக் கல்லூரி சந்திப்பிலிருந்து ஒத்தகடை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூர் நான்கு வழிச் சாலையில் பாண்டிகோவில் சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை செல்வதற்கு எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.

இதே போன்று, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, ஒத்தக்கடை வழியாக மேலூர் நான்கு வழிச் சாலை, பாண்டிகோவில் சாலை வழியாக விரகனூர் சுற்றுச் சாலை, அங்கிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கும் செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.

மேலூர் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் கிடாரிப்பட்டி, வள்ளாலப்பட்டி, அழகர்கோவில், கடச்சனேந்தல், சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக மேலூர், திருச்சிக்குச் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் 120 அடி சாலை, சர்வேயர் காலனி சந்திப்பு, கடச்சனேந்தல், அழகர்கோவில், வள்ளாளப்பட்டி, கிடாரிப்பட்டி வழியாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிகோவில் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் வெளி வாயில் வழியாக பழச் சந்தை சந்திப்பு, மேலமடை சந்திப்பு, சுகுணா ஸ்டோர் சந்திப்பு, வைகை வடகரை புதிய சாலை வழியாக விரகனூர் சுற்றுச் சாலை சென்று, சரஸ்வதி டிம்பர்ஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து மண்டேலா நகர் சந்திப்பு, விரகனூர் சுற்றுச் சாலை சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து தனக்கன்குளம் சந்திப்பு, திருநகர், பழங்காநத்தம் சுற்றுச் சாலை வழியாக நகருக்குள் செல்லலாம்.

அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து மண்டேலா நகர் சந்திப்பு, விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருத்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மண்டேலா நகர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் நினைவு வளைவு வழியாக நகருக்குள் செல்லலாம்.

அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து மண்டேலா நகர் சந்திப்பு, விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மண்டேலா நகர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் நினைவு வளைவு வழியாக நகருக்குள் செல்லலாம்.

மேலூர் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை வழியாக திருமங்கலம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிர்த்து மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூர் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்புக்குச் சென்று கப்பலுர் சுற்றுச் சாலையைப் பயன்படுத்தி விரைவாகச் செல்லலாம்.

திருமங்கலம், அருப்புக்கோட்டை சாலையிலிருந்து விரகனூர், பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக நேரடியாக மேலூர் சாலை வழியாக திருச்சி, சென்னை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்களும் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிர்த்து கப்பலூர் நான்கு வழிச் சாலை வழியாக துவரிமான், சமயநல்லுர் சுற்றுச் சாலை வழியாக திண்டுக்கல் சாலை தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அலங்காநல்லூர் சாலை வழியாக மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்புக்கு சென்று விரைவாகச் செல்லலாம்.

கப்பலூர் பாலம் சந்திப்பு, அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை சந்திப்பு, விரகனூர் சுற்றுச் சாலை சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, மதுரை விவசாயக் கல்லூரி சுற்றுச் சாலை சந்திப்பு ஆகிய சாலைகளிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு செல்லக் கூடிய பொதுமக்களின் வாகனங்கள் வழக்கமான பாதையைப் பயன்படுத்திச் செல்லலாம்.

விழாவுக்கு பயனாளிகள் வரக்கூடிய வாகனங்களின் வழித் தடங்கள்: கள்ளிக்குடி, சேடபட்டி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து விழாவுக்கு வரும் பயனாளிகளின் வாகனங்கள் கப்பலூர் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகர் சுற்றுச் சாலை, விரகனூர் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக சென்று பப்பீஸ் உணவகம் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரக் கூடிய வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை அடுத்து உள்ள புறவழிச் சாலையில் வலதுபுறம் திரும்பி கப்பலூர் பாலம் சென்று, அங்கிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலா நகர் சுற்றுச் சாலை, விரகனூர் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக சென்று பப்பீஸ் உணவகம் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

வாடிப்பட்டியிலிருந்து வரும் வாகனங்கள் தனிச்சியம், அலங்காநல்லுர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மீனாட்சிமிஷன் மருத்துவமனை சந்திப்பு, உத்தங்குடி சென்று விழா நடைபெறும் இடத்துக்கு எதிரே உள்ள சாலையில் பயனாளிகளை இறக்கிவிட்டு விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கொட்டாம்பட்டி, மேலூர் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஒத்தக்கடை வழியாக உத்தங்குடிக்கு வந்து, விழா நடைபெறும் இடத்தின் அருகிலுள்ள வளர் நகர் சந்திப்பு சோதனைச் சாவடி அருகே பயனாளிகளை இறக்கி விட்டு, விவசாயக் கல்லூரிக்கு எதிரே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலம்மாள், பைரவா வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரம் சாலைகளிலிருந்து வரக்கூடிய பயனாளிகளின் வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து பாண்டிகோவில் சாலை வழியாகச் சென்று பப்பீஸ் ஹோட்டல் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும். மேற்படி நிகழ்ச்சியானது போக்குவரத்துக்கு இடையூறின்றி சிறப்பாக நடைபெறும் பொருட்டு ஏற்படுத்தப்பட உள்ள மேற்கண்ட தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பயனாளிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+