’அண்ணி’ திரிஷா துணை முதலமைச்சர்? கொளுத்திப் போட்ட ஆர்பி உதயகுமார்! கொந்தளித்த திரிஷா மன்றம்!
மதுரை: முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அண்ணி திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம் எனவும் விமர்சித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்," கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம்.

ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் சைலண்டாக நியமித்து வருகிறார்கள்.
தற்போது கோயில் அறங்காவலர் நியமனகுழுவில் உறுப்பினராக முதல்வர் விஜயின் 'கோட்' தயாரிப்பாளர் கேரளாவை பூர்விமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் , கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல முதலமைச்சரின் தனி செயலாளராக முதல்வர் விஜய் நடித்த லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் அன்புக்குரியவரான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அண்ணி திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம்" என பேசியிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகை திரிஷா குறித்து ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர்.
அதில், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், தற்போது ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக போஸ்டர் ஒப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
