ஆண்டிபட்டி தொகுதியில் களமிறங்கும் டிடிவி தினகரன் மனைவி? கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்!
மதுரை: ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை போட்டியிட விடக் கூடாது என்று உள்ளூர் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆண்டிபட்டி தொகுதியை வேறு கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்றும் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் டிடிவி தினகரன் தனது மனைவி அனுராதாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், இன்று மாலை நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர். டிடிவி தினகரனுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், பாஜக தனது ஒதுக்கீட்டில் ராஜ்ய சபா சீட் ஒன்றையும் கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டிடிவி தினகரன் தரப்பில் பெரியளவில் அதிருப்தியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு முன்பாகவே டிடிவி தினகரன், எந்தக் கூட்டணியில் இணைந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக நிர்வாகிகள் வீடு பிடித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இதனை முதலில் அதிமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் அமமுகவை எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் சேர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் டிடிவி தினகரன் இப்போது கூட்டணிக்குள் வந்த பின், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
ஏனென்றால் ஆண்டிபட்டி தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்திருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் ஜானகி ஆகிய மூன்று முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி ஆண்டிபட்டி. கடந்த தேர்தலில் அதிமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆண்டிபட்டி தொகுதியில் தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை அதிமுகவுக்கு சாதகமாக அந்த தொகுதி இருந்து வருகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆண்டிபட்டி அதிமுக நிர்வாகிகள் இப்போது எதிர்ப்பு தகவலை கொடுத்துள்ளனர். அதேபோல் அமமுகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டால், அது டிடிவி தினகரன் எம்பியாக அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தனது மனைவி அனுராதாவை களமிறக்கக் கூடும் என்று அதிமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துவிட்டதால், அமமுகவினர் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதால், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு அமமுகவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் திமுகவினரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications