Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி வருகிறேன்”.. உறுதி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிட்டாபட்டி கிராமத்திற்கு வருகை தர உள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகைக்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

mk stalin tungsten mining project arittapatti

இதற்கு மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் இந்த போராட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நான் ஆட்சியில் இருக்கும் வரை இங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன். அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சூளுரைத்திருந்தார்.

ஜனவரி 7 ஆம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 15 கி.மீ நடைபயணமாக மதுரை வந்த போராட்டக் குழுவினர் தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்று தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினருடன் சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து கோரிக்கைகளை வைத்த நிலையில், மத்திய அரசு இந்த ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

mk stalin tungsten mining project arittapatti

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்கள் நீடித்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நாளை அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ளது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிப் பகுதியை சேர்ந்த ஊரின் முக்கிய நபர்கள் நாளை பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

mk stalin tungsten mining project arittapatti

அப்போது மேலூர் பகுதி விவசாயிகள், நாளை நடக்கும் பாராட்டு விழாக்கு வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மதுரை வருவதாக உறுதி அளித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

நாளை ஜனவரி 26 ஆம் தேதி காலை சென்னையில் குடியரசு தின நிகழ்வுகளை முடித்துக்கொண்டு விமானம் மூலமாக மதுரை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிட்டாபட்டி சென்று, இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் மதுரை வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+