ஆணி அடிச்ச மாதிரி.. இன்னும் 5 வருஷத்துக்கு நம்மதான்! விஜய்யை தோற்கடிக்க முடியாது.. வன்னியரசு உறுதி!
மதுரை: தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தவெக அரசு தொடரும் எனவும், மேததாது பகுதியில் கர்நாடக அரசு பாஜக துணையோடு அணை கட்ட முயற்சிப்பதை, நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என விசிக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான வன்னியரசு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி தவெக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதனை தமிழக சமூகநீதி மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துக் கொண்டு தொடங்கி வைத்து, மருத்துவரிடம் உடல் பரிசோதனை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வன்னியரசு," குழந்தைகளின், உற்சாகம் மற்றும் ஆக்கத்தினை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அமைச்சர் வன்னியரசு
மேகதாது அணை விவாகரத்தில் கர்நாடகா அரசு, எடியூரப்பா காலம் முதல், பாஜக துணையோடு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக அணைக்கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்கு கடந்த கால ஆட்சி முதல் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாது அணை கட்ட தவெக அரசு இதனை ஒரு போதும் அனுமதிக்காது, தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான்.
முதல்வர் விஜய்
மேலும், தமிழகத்தில் முதல்வர் விஜய் வழிகாட்டுதலின் படி, பல்வேறு துறைகளில் நடைபெற்று வந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏஐ மூலம் நூலகத்தில் ஊழல் நடந்திருப்பது இதுதான் முதல்முறை. அறிவியலை பயன்படுத்தி ஊழல் நடந்திருப்பது மிக மோசமான முன்னுதாரணம்.
சட்டம் ஒழுங்கு
அதுவும் பெரியாரைப் போற்றும் நிலையில் அவர் பெயரை பயன்படுத்தி ஊழல் நடந்துள்ள நிலையில், அதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதனை மடைமாற்றும் விதமாக பேசுவது, திசை திருப்புகின்ற வேலையாக பார்க்க வேண்டும். தமிழகத்தில், மதுபோதையில் சாதாரணமாக நடைபெறும் சண்டைகளையும் காரணம் காட்டி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல.
லாக்கப் டெத்
மதுரையில், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் உயிரிழந்திருப்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுவாக லாக்கப் டெத் என்பது நடக்கக்கூடாது. விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பாதுகாப்பு உறுதி குறித்து காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனித உயிர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.
தமிழக அரசு
மேலும் தமிழக அரசு மீதான மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழகம் மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக தவெக அரசு செயல்பட்டு வரும் நிலையில், எத்தகைய தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தாலும், அதனை தோற்கடித்து 5 ஆண்டுகள் முழுமையாக இந்த தவெக அரசு செயல்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இது நல்ல அரசாக, நல்ல ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் மாநிலத்தின் உரிமை மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்கின்ற அரசாக தமிழக அரசு உள்ளது. அதற்கான முயற்சியாக தமிழக முதல்வர் நாளை டெல்லி சென்று மேகதாது உள்ளிட்ட விசயங்களை பேச உள்ளார்" என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
