"சைலண்ட் விசிட்" அரியலூர் அனிதா முதல் திருப்புவனம் அஜித் குமார் வரை.. இதுதான் தவெக தலைவர் விஜய்!
மதுரை: காலவர்களின் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். விஜயின் வருகை குறித்து அக்கட்சியினருக்கு தெரியாத நிலையில், சைலண்டாக மீண்டும் விஜய் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். இதற்கு முன்பாகவும் விஜய் 3 முறை இதேபோல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார், காவலர்களின் கொடூரமான தாக்குதலால் உயிரிழந்தார். அஜித் குமாரின் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விஜய் சொன்ன வார்த்தை
அஜித் குமார் வீட்டிற்கு விஜய் வந்து அவரின் தாய் மற்றும் சகோதரர்களின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார். அதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித் குமாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தவெக சார்பாக ரூ.2 லட்சம் நிவாரண உதவியை கொடுத்த விஜய், என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. உடனடியாக செய்யத் தயார் என்றும் கூறி சென்றுள்ளார்.
விஜயின் சைலண்ட் விசிட்
விஜயின் இந்த சைலண்ட் விசிட் அவரின் அரசியல் பாணியாகவே மாறி இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பாகவும் விஜய் இதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சைலண்டாக நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா உயிரிழந்தார்.

அனிதா வீட்டில் விஜய்
அப்போது அரசியல் கட்சிகள் சென்றாலும், கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது அண்ணன் மற்றும் தந்தை ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் வீட்டில் தரையில் அமர்ந்தபடி அவரது தந்தைக்கு ஆறுதல் சொல்லிய புகைப்படங்கள் அப்போதே சோசியல் மீடியாவில் வெளியாகின.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், ரூ.1 லட்சம் நிவாரண உதவி செய்தார். இதற்காக நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் எந்த பாதுகாப்பும் இன்றி விஜய் சென்றிருந்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
இதனைத் தொடர்ந்து கட்சி தொடங்கிய பின், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் நேரில் சென்றார். தற்போது மீண்டும் அஜித் குமார் மரணத்திற்கும் தனது ஸ்டைலில் விஜய் வந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் ஸ்டைல்
விஜய் work from home அரசியலில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், முக்கியமான பிரச்சனைகளுக்கு உடனடியாக களத்திற்கு வருவதற்கும் தயங்க மாட்டேன் என்று சொல்லும் வகையில் அவரின் செயல்பாடுகள் உள்ளது. இதனால் தவெகவினர் சோசியல் மீடியாவில் லாக் அப் மரணம் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications