மதுரை: சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசி உள்ளார்.
Aug 21, 2025, 5:36 pm IST
நீங்கதான் ராஜா.. நீங்க தேர்வு செய்ய போகும் அந்த தளபதி யார்? - விஜய் சூசமாக சொன்ன குட்டி கதை
Aug 21, 2025, 5:36 pm IST
ஒரு நாட்டில் ஒரு ராஜா - தவெக மாநாட்டில் விஜய் சூசகமாக சொன்ன குட்டி கதை
Aug 21, 2025, 5:19 pm IST
நான் ஒன்றும் மார்க்கெட் போன பின், அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன் - விஜய் பேச்சு
Aug 21, 2025, 5:18 pm IST
மதுரை கிழக்கில் விஜய் போட்டி என்றதும் ஆரவாரித்த தொண்டர்கள். கடைசியில் எல்லா தொகுதியில் விஜய்தான் போட்டி, அப்படி நினைத்து வாக்களியுங்கள் என்று விஜய் விளக்கம்
Aug 21, 2025, 5:14 pm IST
உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள் - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து விஜய் கிண்டல்
Aug 21, 2025, 5:14 pm IST
மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள் - முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து விஜய் கிண்டல் பேச்சு
Aug 21, 2025, 5:13 pm IST
வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங்க் அங்கிள் - விஜய் பேச்சு
Aug 21, 2025, 5:11 pm IST
இஸ்லாமியர்கள், விஜயகாந்த், எம்ஜிஆர், மோடிக்கு கேள்வி என்று அடுத்தடுத்து முக்கிய விஷயங்களை விஜய் பேசி வருகிறார்
Aug 21, 2025, 5:11 pm IST
எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை.. அப்படிப்பட்ட தலைவர் அவர் - விஜய்
Aug 21, 2025, 5:08 pm IST
நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே - மக்களை ஏமாற்றியது போதும் - மோடிக்கு அடுக்கடுக்காக விஜய் கேள்வி
Aug 21, 2025, 5:07 pm IST
இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா? - விஜய்
Aug 21, 2025, 5:07 pm IST
கூட்டணி வைக்கலாம்.. கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது - விஜய்
Aug 21, 2025, 5:06 pm IST
2026ல் தவெக - திமுக இடையில்தான் போட்டியே, வேறு போட்டியே இங்கே இல்லை - விஜய்
Aug 21, 2025, 5:06 pm IST
தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் - விஜய்
Aug 21, 2025, 5:04 pm IST
நாங்கள் ஒன்று உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை - விஜய்
Aug 21, 2025, 5:04 pm IST
டீலிங் போட்டு, கூட்டணி வச்சு அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை - விஜய்
Aug 21, 2025, 5:04 pm IST
எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான், மாற்றமே இல்லை - விஜய் அறிவிப்பு
Aug 21, 2025, 5:01 pm IST
சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த் - தவெக தலைவர் விஜய்
Aug 21, 2025, 5:01 pm IST
அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன் - ரஜினி பற்றி விஜய் சூசக பேச்சு
Aug 21, 2025, 5:00 pm IST
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள் - விஜய்
Aug 21, 2025, 4:58 pm IST
தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம் - விஜய்
Aug 21, 2025, 4:56 pm IST
என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா - விஜய் பேச்சு
Aug 21, 2025, 4:56 pm IST
சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா - விஜய் பேச்சு
Aug 21, 2025, 4:56 pm IST
சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும் - விஜய் பேச்சு
Aug 21, 2025, 4:55 pm IST
சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது - விஜய் பேச்சு
Aug 21, 2025, 4:41 pm IST
பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர அதிமுக தீவிரமாக செயல்படுகிறது, பின்வாசல் வழியாக அதிமுக பாஜகவிற்கு வழி போட்டு கொடுத்துள்ளது - ஆதவ் அர்ஜுனா
Aug 21, 2025, 4:40 pm IST
ஊழல்தான் முக்கியம், சமூக நீதி முக்கியம் இல்லை என்று அரசியல் செய்கிறார் ஸ்டாலின் - ஆதவ் அர்ஜுனா
Aug 21, 2025, 4:39 pm IST
மதுரை மாநாட்டிற்கு பெரிய தடைகளை செய்தார் மூர்த்தி, மூர்த்தி எங்கள் கூட்டத்தை தடுக்க பார்த்தார் - ஆதவ் அர்ஜுனா
Aug 21, 2025, 4:38 pm IST
ஸ்டாலின் தனது தந்தையிடம் இருந்து ஊழல் செய்வதை கற்றுக்கொண்டார். தனது குடும்பம் மட்டும் வளர வேண்டும் என்று அரசியல் செய்கிறார் - ஆதவ் அர்ஜுனா
Aug 21, 2025, 4:38 pm IST
விஜய்யை காணும் ஆர்வத்தில் இருந்த தொண்டர்கள், அவரை கண்டதும் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்
READ MORE
12:33 PM, 21 Aug
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது
பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலுக்கு நள்ளிரவில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர்
மாநாடு பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டம்
தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார்
12:33 PM, 21 Aug
மதுரை தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
எலியார்பாத்தி, வலையங்குளம், காரியாப்பட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் விடுமுறை
12:34 PM, 21 Aug
மதுரையில் இன்று 2-வது மாநில மாநாடு: இப்போதே 75000 பேர் வரை திரண்டு உள்ளதாக தகவல்
12:50 PM, 21 Aug
தவெக மாநாட்டில் மோர் மோசடி: தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை வழிமறித்து இலவசமாக மோர் தருவதாக மோசடி
இலவசமாக மோர் தருவாதாக கூறி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பெண்கள்
வெயிலின் தாக்கம் பொறுக்க முடியாமல் மோரை வாங்கி குடித்த தொண்டர்களிடம் பணம் கேட்டு அடாவடி
1:05 PM, 21 Aug
விஜய் மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
1:21 PM, 21 Aug
3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தகவல்
1:29 PM, 21 Aug
5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2:04 PM, 21 Aug
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி சாமானிய தொண்டனைச் சித்ரவதைப் படுத்தி, மாற்று அரசியலைத் தருகிறேன் என கேரவனுக்குள் ஒழிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய் என்று திமுக விமர்சனம்
2:20 PM, 21 Aug
எலியார்பட்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தவெக மாநாடு நடக்கும் இடத்தில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எலியார்பட்டி சுங்கச்சாவடியில் இருந்தே வாகனங்கள் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2:40 PM, 21 Aug
தவெக மாநாடு முன்கூட்டியே தொடங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். லட்ச கணக்கில் தொண்டர்கள் திரண்டதால் மாநாடு முன்கூட்டியே தொடங்கப்படுவதாக அறிவிப்பு!
2:45 PM, 21 Aug
தீர்மானங்கள் என்ன?
மதுரை பாரபத்தியில் நடக்கும் தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல்.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் என தகவல்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்மானம்.
லாக்அப் மரணம், பரந்தூர் விமானநிலையம் போன்றவை குறித்தும் தீர்மானம்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.
2:49 PM, 21 Aug
எந்த வெயில்னாலும் காத்திருந்து விஜய பார்ப்போம்... மதுரை த.வெ.க மாநாட்டில் விஜயை பார்ப்பதற்க்காக கீழே விரித்த விரிப்பை குடையாக மாற்றி அமர்ந்த பெண்கள்
3:10 PM, 21 Aug
கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தவெக மாநாடு முன்கூட்டியே தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
3:18 PM, 21 Aug
தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது
3:18 PM, 21 Aug
லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு முன்கூட்டியே தொடங்கியது
3:18 PM, 21 Aug
தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார்
3:18 PM, 21 Aug
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு தொடங்கியது
3:27 PM, 21 Aug
வெயில் காரணமாக பலர் அவதி: மருத்துவமனைக்கு பாய்ந்துசெல்லும் ஆம்புலன்ஸ்கள்
3:27 PM, 21 Aug
தவெக மாநாட்டில் பதற்றம்: அடுத்தடுத்து மயங்கிவிழும் பெண்கள், குழந்தைகள்
3:28 PM, 21 Aug
தவெக மாநாட்டில் கடைசி நேரத்தில் ப்ளானை மாற்றிய விஜய்!
3:32 PM, 21 Aug
தவெக மாநாட்டில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கழிப்பறைகளில் போதிய தண்ணீர் இல்லை என சில ஊடகங்கள் காலையில் இருந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உண்மையில் மாநாட்டில் அது போன்று இல்லை என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்
3:34 PM, 21 Aug
விஜய் தவெக மதுரை மாநாடு நேரலை
3:46 PM, 21 Aug
மதுரையில் தவெக மாநாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறும் விஜய் இந்த நிகழ்வில் மேடையில் தனது பெற்றோர்கள் சந்திரசேகர் - ஷோபாவை ஏற்றி உள்ளார்
3:46 PM, 21 Aug
விஜய் குரலில் பாடிய - "உங்கள் விஜய் உங்கள் விஜய்" பாடல் வெளியீடு
3:46 PM, 21 Aug
தவெக மாநாடு - தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் வெளியீடு
3:52 PM, 21 Aug
தவெக மாநாடு: மக்களை பார்த்தபடி விஜய் மேடையில் ரேம்ப் வாக் செல்கிறார். க்ரீஸ் கம்பிகளால் போடப்பட்டுள்ளதால் மேடைக்கு அருகே நெருங்க முடியாமல் ரசிகர்கள் தள்ளுமுள்ளு
3:54 PM, 21 Aug
தவெக மாநாட்டிற்கு சென்றவர் கடும் வெயில், நெரிசல் மற்றும் தாகம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பலி
3:59 PM, 21 Aug
தவெக மாநாட்டில் 1000 நிருபர்கள் முகாமிட்டதன் ரகசியம் என்ன?
4:00 PM, 21 Aug
தலையில் கட்சி துண்டைக் கட்டிக்கொண்டு விஜய் ரேம்ப் வாக். விஜய் மீது மலர்களை வீசி தொண்டர்கள் ஆரவாரம்
4:10 PM, 21 Aug
விஜய் ரேம்ப் வாக் செய்த போது ரசிகர்கள் சிலர் க்ரீஸ் தடவிய பேரிகேட்டையும் தாண்டி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு. உள்ளே நுழைந்த ரசிகர்களை பவுன்சர்களை தூக்கி வெளியே அனுப்பினார்கள்
TVK Madurai Maanadu LIVE News Updates in Tamil (தவெக மதுரை மாநாடு): தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்க உள்ளது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், லைவ் நியூஸ், தளபதி விஜய் பேச்சு, யார் யார் பங்கேற்றார்கள், சிறப்பம்சங்கள் என லேட்டஸ்ட் செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.