உதயநிதி ஒரு டம்மி.. இப்படி பேசி பேசிதான் திமுகவை மக்கள் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க! தவெக அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவிற்கு கூச்சமே இல்லையா? ஏற்கனவே இப்படி பேசி, பேசி தான் கொத்து பரோட்டா போட்டு உள்ளார்கள் எனவும், உதயநிதி ஸ்டாலின் தான் பேசியதை தங்கள் குழந்தைகளுடன் வீடியோவை காட்டி விளக்கம் கொடுக்க முடியுமா? என தவெக பிரமுகரும், மத்திய தொகுதி எம்எல்ஏவுமான முஸ்தபா விமர்சித்துள்ளார். மேலும், திமுகவினர் பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.

மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை மத்திய தொகுதி தவெக மாவட்ட செயலாளரும், மத்திய தொகுதி எம்எல்ஏவுமான முஸ்தபா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

TVK Musthafa Udhayanidhi Stalin DMK

இந்த நிகழ்வில், மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவுடன் தவெகவில் இணைந்த இஸ்லாமிய பெண்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களை சந்தித்தார்.

முஸ்தபா

அப்போது பேசிய அவர்," மாற்றுக் கட்சியினர் இணைவால் பனையூர் தற்போது நிரம்பி வழிகிறது. வாரத்தில் ஒருமுறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஊழலில்லாத ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடுத்து வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நிறைவேற்றி இருக்கிறார்.

விஜய்

ஏற்கனவே ஐந்து வருடம் தமிழக மக்களை திமுக ஏமாற்றி இருக்கிறது. இதனை மாற்றி தமிழ்நாடு மக்கள் விஜய்யைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேகமாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. உலகமே இதை உற்று நோக்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் மதுரையில் பொது விடுமுறை விட வேண்டும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், சிறப்பு பேருந்துகள் விட வேண்டும். ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் தீயணைப்பு நிலையத்தை பெர்மனண்டாக வைக்க வேண்டும் என்று சட்டசபையில் நான் பேச உள்ளேன். கண்டிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்போம்.

திமுக

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் பேசும்போது, சட்டசபையில் நான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பேன். பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார். எந்த காலத்திற்கு திமுக இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்தார்கள்? கொஞ்சமாவது திமுகவிற்கு கூச்சம் இருக்கிறதா?

திமுக பாஜக கூட்டணி

சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று சொன்னவர்கள் திமுகவினர்கள்தான். மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்று சொல்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் தாமரை வாழ்க, பாஜக என்று கூறியவர்கள் திமுகவினர்கள். நரேந்திர மோடி சிறப்பான ஆட்சியைத் தருகிறார் என்று திமுகவினர் பேசினார்கள். இன்று திமுகவினர் பாஜகவினரோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு சார்பாக பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார். கர்நாடகா சென்று எந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை திமுகவினர் பார்க்கிறார்கள்?

உதயநிதி ஸ்டாலின்

பாஜகவிற்கு செம்பு கூஜா தூக்கும் வேலையை திமுக செய்கிறது. பாஜக-திமுக கள்ளக் கூட்டணி ஓபன் ஆக வைத்து பேசுகிறார்கள். உதயநிதி ஒரு டம்மி பாவாதான். மிசாவிற்கு பயப்பட மாட்டோம் என்று பேசியவர்கள் லுக் அவுட் நோட்டீஸிற்கு பயந்து ஓடி ஒளிகிறார்கள். உதயநிதியை கைது செய்கிறோம் என்று நீதிமன்றம் சொல்லியதா? உதயநிதி பேசியது தஞ்சாவூர் மாவட்டத்தில். அதனால்தான் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றார்கள். விசாரணைக்கு அழைத்துச் சென்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏன் பயப்படுகிறீர்கள்?

முக ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை, பெண் குழந்தை உள்ளது. நீங்கள் பேசிய வார்த்தைக்கு வீடியோ வைத்து உங்கள் குழந்தைகளிடம் விளக்கம் கொடுக்க முடியுமா? கூச்சம் இல்லாமல் நாட்டின் முதலமைச்சரை விமர்சிக்கிறார்கள். காதில் கேட்க முடியாத வார்த்தைகளைக் கொண்டு விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே இப்படி பேசி பேசியேதான் கொளத்தூரில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை கொத்து புரோட்டா போட்டு வீட்டில் அமர வைத்திருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் திமுக அதலபாதாளத்திற்கு செல்லும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+