நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டி? "மதுரை வடக்கு" தான் குறியா? போஸ்டர் கிளப்பிய பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜய் 2026 ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்? என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் தான் நடிகர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். அதன்பிறகு கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது.

vijay tvk

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற உள்ளது.

இந்த அரசியல் மாநாட்டில் தான் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கொடிக்கான விளக்கத்தை அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த அரசியல் மாநாடு தமிழகத்தில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் கவனத்தை பெற உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிவித்தார். அப்போதே அவர் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்பதை தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவரது கட்சி தனித்து போட்டியிடுகிறதா? இல்லை ஏதாவது கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதா? என்பதும் தேர்தல் தேதி நெருங்க நெருங்க தான் தெரியவரும். அதேபோல் நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் போட்டியிடும் தொகுதி பற்றி கடந்த 8 மாதங்களாக உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் மதுரை வடக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான போஸ்டர்கள் மதுரை வடக்கு தொகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் நடிகர் விஜயின் போட்டோ பெரிதாக இடம்பெற்றுள்ளது. அதில் 2026 ன் மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழக தலைவர் விஜய் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில் இந்த போஸ்டர் என்பது பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்தின் போட்டோவும் உள்ளது. இதுதவிர பிவி இன்பராஜ், எஸ் அலாவுதீன், கே முத்தலீபு என்ற 3 பேரின் பெயர்களுடன் போட்டோக்கள் உள்ளன. இதனால் இவர்கள் 3 பேர் தான் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி உண்மையிலேயே நடிகர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் தான் போட்டியிட உள்ளாரா? இல்லாவிட்டால் பரபரப்பை கிளப்ப இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதா? என்ற வினாவும் எழுந்துள்ளது. இருப்பினும் தற்போது மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜய் என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் ஜி தளபதி உள்ளார். இவர் கடந்த 2012 சட்டசபை தேர்தலில் 73,010 ஓட்டுகள் பெற்று வென்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சரவணன் 50,094 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் எஸ் அன்பரசி 15,311 ஓட்டுகள் பெற்று 3ம் இடம், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் எம் அழகர் 12,102 ஓட்டுகளுடன் 4வது இடம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஜெயபால் 3,280 ஓட்டுகளுடன் 5ம் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+