கமல் கையில் டார்ச்..பேட்டரி எங்கே! விஜயால் திமுகவுக்கு குத்துதே..குடையுதே! போட்டுடைத்த செல்லூர் ராஜு
மதுரை: கமல் கட்சி தொடங்கும்போது டார்ச் லைட் வைத்திருந்தார், இப்போது டார்ச் லைட் மட்டுமே உள்ளது
பேட்டரியை காணோம்.. நடிகர் கமல் மாதிரி இல்லாமல் விஜய் மாநாட்டில் நன்றாக மிக தெளிவாக பேசினார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்.

இதனையடுத்து அதிமுக மதுரை மாநகர் அதிமுக சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தலைமையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு," விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளது. போக போக தான் கட்சியின் செயல்பாடுகள் தெரிய வரும். விஜய்யின் மாநாட்டால் தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து உள்ளனர்.
அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கும் போது கலைஞர் கேலி, கிண்டல் செய்தார். கலைஞர் அதிமுகவுக்கு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அதிமுக மிகப்பெரிய அடக்குமுறைகளை எதிர்க் கொண்டு வந்துள்ளது, சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு இன்னும் காலங்கள் உள்ளன. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.பாரதி மிக கேவலமாக கிண்டல் செய்துள்ளார். விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணி என முடிச்சு போட வேண்டாம்.
தவெக கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எதற்கு அதிமுகவில் இருக்க வேண்டும். நாங்களும் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே?, குழந்தை பிறந்து அம்மா என அழைப்பது போல விஜய் மாநாடு நடைபெற்றுள்ளது. எப்படி இருக்கு என போக போக பார்ப்போம். நடிகர் கமல் மாதிரி இல்லாமல் விஜய் மாநாட்டில் நன்றாக மிக தெளிவாக பேசினார். கமல் கட்சி தொடங்கும்போது டார்ச் லைட் வைத்திருந்தார், இப்போது டார்ச் லைட் மட்டுமே உள்ளது. பேட்டரியை காணோம்.
விஜய் மாநாட்டில் நல்ல தலைவர்கள் குறித்து தனது தொண்டர்களிடம் பேசியுள்ளார். இதை நாம் வரவேற்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்பதே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பணம் கொடுத்து, விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் போது எத்தனையோ புயல்களை தாண்டியும், 25,000 போராட்டங்களை தாண்டியும் மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக செயல்படுவது போல விஜய்யும் செயல்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமி கூறும் போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி இருக்காது. திராவிட மாடல் ஆட்சியை ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் எமாற்றி விட்டார். திராவிட மாடல் ஆட்சி குறித்து நாங்கள் சொன்னதை தான் விஜய் சொல்கிறார். அதிமுகவின் குரலாக தான் விஜய் ஒலித்து இருக்கிறார், போக போக தான் விஜய் கட்சியின் செயல்பாடுகள் தெரியும். திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை. திமுகவின் இளைஞர் பட்டாளம் விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் குத்துதே!!! குடையுதே!!! என பேசி வருகிறார்கள்" என கூறியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications