அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு காரணங்களால் பலியானதாக கூறப்படுகிறது.

இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம் முழுக்கவிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இருக்கிறார்கள்.

Two people died in Jallikattu in Madurais Alanganallur

இந்த ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்கிறது.இதில் 848 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தவர் திடீரென பலியான சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அலங்காநல்லூருக்கு ஜல்லிக்கட்டை பார்க்கவந்த பெரியகருப்பன் திடீரென நெஞ்சுவலியால் சரிந்து விழுந்தார்.

இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக இவர்கள் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் கூட்டநெரிசலில் சிக்கி மதுரையை சேர்ந்த இன்னொரு நபரும் பலியானார். இந்த முறை ஜல்லிக்கட்டை காண அதிக அளவில் கூட்டம் வந்துள்ளது. இந்த கூட்டத்தில் சிக்கி அவர் பலியானதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+