பல நூறு பயணிகள்.. ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த 2 ரயில்கள்.. மதுரை அருகே பரபரப்பு!
மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே ஒரே நேரத்தில் வந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே ஒரே நேரத்தில் வந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் இருந்து தினமும் செங்கோட்டை நோக்கி ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் மதுரைக்கு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இதில் மதுரையில் இருந்து புறப்படும் ரயில் வேகமாக திருமங்கலம் வந்து பின் செல்லும்.
இந்த நிலையில் இந்த செங்கோட்டை நோக்கி செல்லும் ரயில் திடீர் என்று தாமதமாக வந்து இருக்கிறது. திருமங்கலம் வரும் போதே 1 மணி நேரம் வரை அந்த ரயில் தாமதமாக வந்தது. இதனால் திருமங்கலம் ரயில் நிலையத்தில், இந்த ரயில் 1 நிமிடம் மட்டுமே நின்றது.

வேகம்
தாமதத்தை ஈடுகட்டுவதற்காக உடனே இந்த ரயில் புறப்பட்டது. இந்த ரயில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஆனால் இந்த ரயில் திருமங்கலத்தில் இருந்து உடனடியாக எடுக்கப்பட்டது குறித்து எந்த அறிவிப்பும் செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.

மதுரை ரயில்
இதனால் செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் ரயில் எப்போதும் போல வந்துள்ளது. இதனால் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளது. இது ஒரு வழி பாதை. அதனால் இரண்டு ரயில்களும், ஒரே நேரத்தில் எதிர் எதிரே வந்துள்ளது.

தவறு செய்தனர்
தாமதமாக வந்த மதுரை - செங்கோட்டை ரயில், திருமங்கலத்தில் நிறுத்தப்பட்டு டிராக் மாற்றப்பட்டு, பின் அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் இதை செய்யவில்லை. இதனால் 2 ரயில்களும் எதிர் எதிரே மோதும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இரண்டு ரயிலின் டிரைவர்களும் சுதாரித்த காரணத்தால் சில மீட்டர்கள் தூரத்திலேயே இரண்டு ரயிலும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் சென்றது
அதன்பின் செங்கோட்டை ரயில் மீண்டும் திருமங்கலம் சென்றது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் இடைவெளியில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications