மதுரையில் ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்.. மேயர் பிரச்சனைக்கு முடிவு கட்டுவாரா?
மதுரை: மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தில் திறந்து வைத்துள்ளார். அதேபோல் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள நிலையில், மதுரையின் புதிய மேயர் தொடர்பான முடிவு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்க உள்ளது. இதற்காக மதுரையில் ரூ.10 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கான ஓய்வறை, விஐபி பாக்ஸ், பார்வையாளர்களுக்கான அரங்கம் என்று சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டே திருச்சியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்ட நிலையில், மதுரையில் தற்போதுதான் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட ஹாக்கி வீரர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று திறந்து வைத்துள்ளார். இதற்காக மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
இதனிடையே மதுரை மேயர் விவகாரத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் மூலமாக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மதுரை மேயராக இருந்த இந்திராணி பொன்வசந்த் தனது பதவியில் இருந்து விலகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டில் 69 வார்டுகள் திமுக வசம் இருக்கிறது.
ஆனாலும் இதுவரை மேயரை தேர்வு செய்ய முடியாமல் திமுக தலைமை அமைதி காத்து வருகிறது. இதனிடையே இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடத்தில் இருக்கிறது. தற்போது மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் ஏராளமானவை முடங்கி போயிருக்கின்றன. இதனால் மதுரை மாவட்ட மக்கள் அதிக இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றன.
புதிய மேயரை கொண்டு வருவதில் அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி ஆகியோர் இடையில் போட்டி நிலவுவதாக தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இப்படியான சூழலில் மதுரை மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார்.
இதனால் மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய மேயருக்கான ரேஸில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் வாசுகி சசிகுமார், சரவண புவனேஸ்வரி, லட்சிகா ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications