நான் தவெகவில் இணைகிறேனா? இப்ப எங்கே இருக்கேன் தெரியுமா? மறுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன் எம்எல்ஏ
மதுரை: நான் தவெகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தி- ஓபிஎஸ் ஆதரவாளரும் உசிலம்பட்டி எம்எல்ஏவுமான ஐயப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பனையூர் அலுவலகத்திற்கு சென்றதாக தகவல் வெளியான நிலையில் அவர் உசிலம்பட்டியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் தவெகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தி. அது போல் நான் தற்போது பனையூர் தவெக அலுவலகம் சென்றிருப்பதாக கூறப்படுவது தவறான தகவல்.

நான் தற்போது உசிலம்பட்டியில்தான் இருக்கிறேன். கடைசி வரை ஓ.பன்னீர் செல்வத்துடன்தான் இருப்பேன். அவர் அரசியல் ரீதியாக என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்னும் 3 மாதங்களில் நடைபெறக் கூடிய தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்ததும் இங்கு நிறைய பேர் வந்து இணைகிறார்கள்.
அதிலும் நாஞ்சில் சம்பத், நடிகர் ரவி, ஜேசிடி பிரபாகரன் , அவரது மகன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
திமுகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும், அவரது ஆணவத்தை ஒடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதிலும் விருப்ப மனு பெறாதவர்கள், அதிருப்தியில் இருப்போரை அப்படியே தூக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில்தான் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், தவெகவில் இணையவுள்ளதாகவும் அவர் பனையூர் தவெக அலுவலகத்திற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக உள்ளார். இதுகுறித்து ஐயப்பனிடம் சில செய்தி சேனல்கள் கேட்ட போது: "நான் பெருங்காமநல்லூருக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். தவெகவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவெக சார்பில் என்னிடம் யாரும் பேசவில்லை, நானும் அவர்களுடன் பேச முயற்சிக்கவில்லை.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்டெடுக்கும் பணிகளில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அந்த அறப்போராட்டத்தில் நானும் ஆதரவாளர்களும் உறுதுணையாக நிற்கிறோம். எங்களது ஒரே முடிவு ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றுவதுதான். எனது பாஸ் ஓபிஎஸ் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே ஓபிஎஸ்ஸுடன் இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பார்வேர்டு பிளாக் கட்சி வேட்பாளர் கதிரவனை எதிர்த்து போட்டியிட்டு ஐயப்பன் வென்றார். அது போல் ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் வைத்திலிங்கம் திமுகவுக்கு தாவுவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!











Click it and Unblock the Notifications