Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும் எனவும், கமல்ஹாசனின் டார்ச் லைட்டை திமுக பிடுங்கிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். விஜய் உடன் ஆன கூட்டணி குறித்த பதிலளித்த அவர், மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," மத்திய அரசு எரிபொருள் சேமிக்காதது தான் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என எதிர்க் கட்சிகள் சொல்கிறார்கள். சிலிண்டர் தட்டுப்பாடு நிச்சயமாக இருக்காது. செயற்கையாக முறையில் பதுக்கினார்கள் என்றால் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சொல்லியுள்ளார்.

பிரதமர் மோடிஜி தமிழகத்தில் சிலிண்டரால் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்கு தான் அவருடைய எண்ணம். இதுவரையில் பாதிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் உள்ள எல்லா வருவாய் மாவட்டங்களிலும் திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளார்கள். மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிறார்.

Vadivelu DMK Sellur Raju

ஏனென்றால் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதலமைச்சர். சுக்கிர திசை எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். டார்ச் லைட்டை திமுக புடுங்கிவிட்டது. கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் கொதித்து எழுந்துள்ளார்.

என்ன சமூக நீதி? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை இருக்கின்றது என்றும் மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு பத்திரிகையில் வந்துள்ளது. மற்றொரு பக்கம் தமிழ்நாடு முன்னேறுகிறது என்று சொல்லி முதல்வர் விளம்பரப்படுத்தி உள்ளார். விளம்பரத்தில் தான் திமுக அரசு முன்னேறி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை போல பார்க்கவில்லை. உன்னை போல பார்க்கவில்லை என்று ஒரு பாட்டு உள்ளது.. பேப்பரை திறந்தாலே அவருடைய படம்தான் உள்ளது.

இதில் எங்கே மக்களை காக்க போகிறீர்கள்? தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினோம். சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கமல்ஹாசன் இவ்வளவு பொறுமையாக இருந்து உள்ளார் என்பதை பாருங்கள். திமுக ஆட்சி அமைந்த உடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று கனிமொழி தெரிவித்தார். ஆனால் அவருடைய நாடாளுமன்ற தொகுதியிலேயே நேற்றைய தினம் இறந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க சென்றபோது துரத்தி விட்டார்கள்.

ஏன் போதை ஆசாமிகளை பிடிக்க மாட்டீர்களா? என்பது ஒரு டவுட்டாக உள்ளது. திமுக ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால கூட தமிழக மக்களை காப்பாற்ற முடியாது. இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார் ஆனால் போதை புழக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக தான் தமிழகம் உள்ளது.
NDA கூட்டணியில் விஜய் வந்தால் கூட்டணி வலு பெறுமா?என கேட்கிறீர்கள்.மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிப்பவர்கள் கிடையாது. ஒரு ஆட்சியின் நன்மை தீமைகளை ஆராய்வார்கள்.

நான் நல்லது செய்தால் தான் மக்கள் ஓட்டு எனக்கு போடுவார்கள் இல்லையென்றால் செல்லூர் ராஜு கிளம்பி போ, என்று சொல்லிவிடுவார்கள்.மக்களுக்கு அரசாங்கம் நல்லது செய்திருந்தால் இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை. முன்பு உடை வெண்மையாக வேண்டுமா பளிச்சென்று வேண்டுமா? ஏரியல் பயன்படுத்துங்கள் என டிவியில் விளம்பரம் செய்தார்கள். இப்போது எதை எடுத்தாலும் முதலமைச்சர் விளம்பரமா தான் உள்ளது.

திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்ற நடிகர் வடிவேலு செல்கிறார். வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும். 2011ம் ஆண்டு வடிவேலு புயலாக கிளம்பினார். குஷ்பூ ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் புறப்பட்டார் பார்த்தால் என் தொகுதியில் வந்து பேசினார். ஜெயந்திபுரத்தில் பெரிய கூட்டம் இருந்தது. நானே அவ்வளவுதான் என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது வைகைப்புயலின் ராசி அப்படி என்று. வடிவேலுக்கு உள் மனதில் திமுக வரக் கூடாது என்று இருக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+