வைகை அணையில் 6000 கனஅடி நீர் திறப்பு.. மதுரை தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்
மதுரை: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் தரைப்பாலங்களை மூழ்கடித்துக்கொண்டு வெள்ள நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன கால்வாய், திருமங்கலம் மற்றும் மேலூர் குடிநீர் தேவைக்காக 2099 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணை நிரம்பியுள்ளதால் தற்போது மதுரை மாவட்ட பாசன வசதிகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு மொத்தம் 6099 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் அணையில் உள்ள 7 பெரிய மதகுகள் வழியாக வெளியேறுவதால் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்று பாலம் வழியாக கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரையில் இரண்டாவது நாளாக தரைப்பாலங்களை மூழ்கடி ஆழ்வார்புரம் சர்வீஸ் சாலை மற்றும் யானைகல் சர்வீஸ் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதே சாலைகளில் வெள்ளநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வைகை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவே, செல்ஃபி எடுக்கவோ கூடாது என்றும் என்றும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications