Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

160 கிமீ வந்தே பாரத்.. மாடு முட்டினாலும் தாங்காது.. ரயிலுக்கு காவி கலர் தேவையா அமைச்சரே: மதுரை எம்பி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ரயில்கள் அதிகமான வேகத்தில் செல்லும்போது, கால்நடைகள் திடீரென குறுக்கே மோதினால் கடுமையான விபத்துக்கள் ஏற்படக்கூடும்.. இதனை பாதுகாப்பு அறிக்கையாக வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையை முன்னிறுத்தி, மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேண்டுகோள் ஒன்றை விடுத்து பதிவிட்டுள்ளார்.. இதனை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்தே பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது.. விரைவான, பாதுகாப்பான, சொகுசான பயணத்தை தந்து வருவதால், கட்டணம் அதிகம் என்றாலும் வந்தே பாரத் ரயிலையே பயணிகள் நாடுகிறார்கள்.

Vande Bharat Madurai Su venkatesan

சென்னை உட்பட நாடு முழுவதும் ஏராளமான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் அந்த ரயில்களின் பாதுகாப்பு தொடர்பான சிலதகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில், "வந்தே பாரத் ரயில்கள் கால்நடைகள் குறுக்கே ஓடும்போது கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுக்கே வரும் கால்நடைகள்

இதுகுறித்து ஆங்கில நாளேடு வெளியிட்டிருந்த செய்தியில், "வந்தே பாரத் ரயிலின் முதல் பெட்டியானது வழக்கமான ரயில்களின் இன்ஜின் பெட்டிகளை விட மிகவும் இலகுவானது.. ஏதாவது தடங்கல் அல்லது கால்நடைகள் குறுக்கே ஓடுவதுகூட அதிக வேகத்தில் பயணிக்கும்போது கடுமையான விபத்துக்கு வழிவகுக்கும்..

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் உருவாக்கப்பட்ட அறிக்கை, அதிவேகமாக இயக்கப்படும் ரயில்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.

160 கிலோ மீட்டர்

ரயில்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, உறுதியான வேலி அமைப்பதை உறுதி செய்யுமாறு ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. ரயில்கள் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் பகுதிகளில் லெவல் கிராசிங்குகள் இருப்பதை தவிர்க்க வேண்டும்..

ரயில்வே வழக்கமான அத்துமீறல் மற்றும் கால்நடைகள் நுழைவு நடைபெறும் இடங்களை கண்டறிந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்களை நிறுத்துதல், சீரான இடைவெளியில் ரோந்து மற்றும் கால்நடைகளுடன் விவசாயிகள் கடந்து செல்ல சுரங்கப்பாதையை அமைத்தல் போன்ர வழிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசு மாடு முட்டி

இந்த அறிக்கையானது பலரது கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.. அதைவிட முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் முன்னணி ரயில் பெட்டிக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பல மாடுகள் மோதியிருக்கின்றன.

ரயில்கள் அதிகமான வேகத்தில் செல்லும்போது, கால்நடைகள் திடீரென குறுக்கே மோதினால் கடுமையான விபத்துக்கள் ஏற்படக்கூடும்.. இதைத்தான், பாதுகாப்பு அறிக்கை, கவலையாக வெளிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பல்வேறு வழித்தடங்களில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ள நேரத்தில் இப்படியொரு வார்னிங் தரப்பட்டுள்ளது.

மதுரை எம்பி வெங்கடேசன்

இந்நிலையில், இந்த ரயில்வே ரயில்வே பாதுகாப்பு அறிக்கையைக் குறிப்பிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், "பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" ரயில்வே துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+