குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.. தெற்கு ரயில்வே
மதுரை : மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. இதபோல் நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும் ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16845), வரும் 30-ந்தேதி வரையில் (9,16,23,30 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846), வரும் 30-ந்தேதி வரையில் (இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும்.
செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16848), வரும் 30-ந்தேதி வரையில் (இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழித்தடம் வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மும்பை ரயில்
நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஹவுரா ரயில்
கன்னியாகுமரியில் இருந்து வரும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ்
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), வரும் 30-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- ஹைதராபாத் ரயில்
கன்னியாகுமரியில் இருந்து வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹைதரபாத் செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications