மதுரையில் 90 வயது மாமனாரை ஆடு, மாடுகளுடன் விட்டு சென்ற கல்நெஞ்சக்கார மருமகள்! சிசிடிவியில் அதிர்ச்சி
மதுரை: மதுரை அருகே 90 வயது மாமனாரை தொல்லையாக கருதி ஆட்டோவில் அழைத்து வந்து ஆடு மாடுகளுக்கு நடுவில் கல் நெஞ்சக்கார மருமகள் இறக்கிவிட்டுச் செல்லும் காட்சிகள் கதி கலங்க செய்கின்றன.
மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் செல்லும் வழியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் முன்பு 90 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் மழை குளிரில் நடுங்கிய படி இருந்தார். இது பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவுக்கு கிடைத்தது.

அவரை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் படி மதுரை ரெட் கிராஸ் அமைப்பிற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்திரவிட்டார். அதன் பேரில் ரெட் கிராஸ் செயலாளர் ராஜ்குமார் வக்கீல். முத்துக்குமார் இன்று அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் அவரிடம் விசாரிக்கையில் அவர் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் பெயர் குபேந்திரன், தந்தை பெயர் வெங்கடாசலம் என்றும் தெரிய வந்தது. டெய்லர் வேலை செய்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மகன் மருதுபாண்டி ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்து வருவதாகவும் மருமகள் ஆட்டோவில் ஏற்றி வந்து இங்கே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
முதியவருக்கு உரிய கவுன்சிலிங் அளித்து முதியவரின் சிகிச்சை முடிந்து உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுவார் என்று மெட்ராஸ் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 90 வயது அடைந்த முதியவரை மருமகள் ஆட்டோவில் வந்த அழைத்துச் சென்று ஆடு மாடுகளுக்கு நடுவில் இறக்கிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் மாமனாரை அழைத்து (இழுத்து) வரும் அந்த பெண் சாலையோரம் ஆடு மாடுகளுடன் விட்டுச் சென்ற போது மனிதம் மரித்துவிட்டதாகவே கருதப்படுகிறது. தன் கணவனை பெற்று ஆளாக்கி, அழகுபார்த்த தந்தை ஸ்தானத்தில் உள்ள மாமனாரை ஈவு இரக்கமின்றி சாலையில் விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.












Click it and Unblock the Notifications