மதுரையில் இருந்து 2 அமைச்சர்கள்.. சிடிஆர் நிர்மல் குமாருக்கு அறநிலையத்துறை.. விஜய் முடிவு என்ன?
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கல்லாணை ஆகிய இருவரும் தவெகவின் அமைச்சரவையில் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும் சிடிஆர் நிர்மல் குமாருக்கு அறநிலையத்துறை கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உதவியை தவெக நாடி இருக்கிறது. இதனால் தேர்தலுக்கு பின் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாகிறது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்பாக ஆளுநரை விஜய் சந்திக்க உள்ளார். இதனிடையே தவெக சார்பாக வெற்றி பெற்ற 107 எம்எல்ஏ-க்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம் தவெக அமைச்சரவை பட்டியலும் தயாராகி வருகிறது. இந்த அமைச்சரவை பட்டியலில் மாவட்ட வாரியாகவும் ஒரு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட வென்ற சிடிஆர் நிர்மல் குமார் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற கல்லாணை அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதில் சிடிஆர் நிர்மல் குமாருக்கு அறநிலையத் துறை கொடுக்கப்படலாம் என்று சில பேச்சுகள் அடிபடுகின்றன.
கல்லாணையை பொறுத்தவரை புஸ்ஸி ஆனந்தின் தீவிர ஆதரவாளர். விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர். மறுபக்கம் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டி போட்டியில் இருந்தாலும், கல்லாணை முந்துவதாக தெரிகிறது. அவருக்கு பத்திரப்பதிவுத் துறை கொடுக்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
சோ.. இவங்க வேற! மகளிரணிக்கு மருத்துவமனையில் என்னங்க வேலை! தேனி தவெகவில் ரீல்ஸ் பஞ்சாயத்து! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications