Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் தவெக சார்பாக பிரபல ஃபைனான்சியரான அன்புச்செழியன் மகன் விவேக் அன்புச்செழியன் போட்டியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சியினருடனும் நட்புடன் பழகி வரும் அன்புச்செழியன், திடீரென தனது மகனை அரசியலில் களமிறக்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாதக தரப்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட சூழலில், அடுத்ததாக திமுக மற்றும் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தவெக வேட்பாளர் பட்டியலும் தயாராகிவிட்டது.

Vijay

ஏற்கனவே 115 வேட்பாளர்களுக்கான நேர்காணலை முடித்து விஜய் தயாராக வைத்திருக்கிறார். தவெகவின் பிரபல முகங்கள் சென்னையில் போட்டியிடும் சூழலில், மதுரையில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே கல்லனை, தங்கப்பாண்டி, மருதுபாண்டியன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

அதேபோல் மதுரையின் மகளிர் முகமாக அறியப்படும் தேன்மொழி பிரசன்னாவும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல ஃபைனான்சியரான அன்புச்செழியனின் மகனும் தவெக சார்பாக களமிறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அன்புச்செழியன் மகன் விவேக் குடும்பத்தின் விருப்பத்தை மீறி வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், அவர் சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன் நல்ல பேச்சுவார்த்தையில் இல்லை என்று சொல்லப்பட்டது. தற்போது அன்புச்செழியன் தனது மகனுக்கு ஆதரவாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

மதுரையில் கோபுரம் திரையரங்கும், ஃபைனான்ஸ், தயாரிப்பு உள்ளிட்ட நிர்வாக பணிகளை மகள் சுவேதா மூலமாக அன்புச்செழியன் மேற்கொண்டு வருகிறார். தற்போது மகளை அரசியல் பக்கம் இறக்க முடிவு எடுத்துள்ளார். இதனால் மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதேபோல் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக விவேக்கை புரோமோட் செய்யும் பணிகளிலும் அன்புச்செழியன் தீவிரமாக உள்ளார். வேட்பாளர் பட்டியல் வெளியான பின், விவேக் அன்புச்செழியன் தொகுதியில் பல்வேறு பணிகளிலும் ஈடுபட உள்ளார். மதுரை மத்திய தொகுதியில் தான் அன்புச்செழியனின் அலுவலகம் உள்ளது. நீண்ட ஆண்டுகளாக இருப்பதால், அங்குள்ள மக்களிடையே செல்வாக்கு பெற முடியும் என்று கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+