மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வோட்டு போட விஜய் வந்தாரே அதே மாதிரி சைக்கிளில்.. மெர்சல் கெட்டப்பில் மதுரையில் வலம் வந்த ரசிகர்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது மெர்சல் பட விஜய் தோற்றத்தில் வந்த ரசிகர் ஒருவர் சைக்கிளில் ஊர்வலமாக வந்து பிரச்சாரம் செய்தது காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

Recommended Video

    வோட்டு போட விஜய் வந்தாரே அதே மாதிரி சைக்கிளில்.. மெர்சல் கெட்டப்பில் மதுரையில் வலம் வந்த ரசிகர்!

    தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

    12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட்

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கலக்கியது போல் இந்த நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கவுள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். மதுரை அனுப்பானடி பகுதி (வார்டு எண் - 88) பெண்கள் தனி வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 100 மாநகராட்சி வார்டுகள் உள்ள நிலையில் இந்த அனுப்பானடி வார்டில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் களம் காண்கிறார்.

    மெர்சல்

    மெர்சல்

    இந்த வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனுப்பானடி பகுதியின் மகளிரணி தலைவர் நாகேஸ்வரி என்பவர், தெற்கு மண்டலத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
    அப்போது விஜய் ரசிகரான குரு என்பவர் மெர்சல் படத்தில் இருந்த விஜய்யின் தோற்றத்தில் வந்து பிரச்சாரம் செய்தார்.

    மேளதாளம் முழங்க..

    மேளதாளம் முழங்க..

    மேளதாளம் முழங்க சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சூழ மேல அனுப்பானடி பகுதியில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள மண்டல அலுவலகம் அமைந்துள்ள முனிச்சாலை பகுதி வரை சைக்கிளில் ஊர்வலமாக வந்தார்.
    இது அப்பகுதியில் கடந்து சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தது. இதே நிறத்தினாலான சைக்கிளில்தான் கடந்த சட்டசபை தேர்தலின் போது நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

    புதுவை முதல்வருடன் சந்திப்பு

    புதுவை முதல்வருடன் சந்திப்பு

    இந்த நிலையில் பனையூர் வீட்டில் விஜய்யை புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை சட்டசபை தேர்தல் 2026 இல் விஜய்க்கு ஆழம் பார்க்கும் தேர்தல்களாக அமையும் என தெரிகிறது.

    English summary
    Vijay Makkal Iyakkam party files nomination in Madurai in Vijay's Mersal getup.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X