விஜய்யின் ஜனநாயகன் பட காட்சிக்கு எதிரான வழக்கு! சரமாரி கேள்வி? ஹைகோர்ட் மதுரை கிளை போட்ட உத்தரவு
மதுரை: விஜய்யின் கடைசி படமான ஜனநாயன் பல சிக்கல்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்று இருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் மதுரையை சேர்ந்த சின்னசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் ஹெச் வினோத் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் வெளியான கடைசி படம் ஜனநாயகன். பொங்கல் ரிலீசுக்கு திட்டமிடப்பட்ட இந்த படம், சென்சார் பிரச்சினையில் சிக்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தாமதமாக வெளியானது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் ப்ரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கடந்த 24 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் திரையரங்குகளில் வசூலை வாரி குவித்து வருகிறது. இதற்கிடையே, இந்த படம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் கிராமத்தை பற்றி தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில், படத்தில் பாப்பாப்பட்டி என்று இடம் பெறவில்லை. பாப்பம்பட்டி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் சட்ட விரோதமாக வெளியான பட காட்சிகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று வாதம் முன்வைக்கப்படது.
அப்போது மனுதாரருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், படம் வெளியாவதற்கு முன்பு இணையதளத்தில் கசிந்த காட்சிகளை பார்த்துவிட்டு எப்படி ஆட்சேபனை தெரிவித்தீர்கள் எனவும், இதுபோன்ற செயல்கள் ஊக்குவிக்ககூடியது அல்ல என்றும் காட்டமாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு தணிக்கை வாரியம், இயக்குநர் ஹெச் வினோத், பட தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications
