நீட்: மாணவர்களிடம் தவறான கருத்தை பரப்பாதீங்க.. தவெக விஜய்க்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனம்
மதுரை: பள்ளி மாணவர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக அறிவுரை வழங்குவதாகக் கூறி, தவறான கருத்துகளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்பி வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நீட் தேர்வு மட்டும் தான் உலகமா. நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெரிது. அதுல நீங்க சாதிக்க நிறைய இருக்கு. குறிப்பிட்ட ஒரு பாடத்துல மட்டும் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்கணும்னு நீங்க எந்த அழுத்தத்தையும் ஏத்திக்க வேண்டாம்." என்று கூறியிருந்தார்.
விஜய்யின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரின் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர்களின் உரிமை பறிக்கப்படும் நிலையில், விஜய்யின் இந்த கருத்து பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது என்று திமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கை உயர்த்துவதற்காக அறிவுரை வழங்குவதாகக் கூறி, தவறான கருத்துகளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்பி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாணவர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கூறியதாவது: மாணவர்கள் மத்தியில் தன் செல்வாக்கை உயர்த்துவதற்காக தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். அரசியல் சூழ்ச்சிகள் தெரியாதவர்கள் பள்ளி மாணவர்கள். அவர்களிடம் நீட் தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்கள் புகுத்தி, அரசியல் பேசி மாணவர்கள் இடையே வன்முறையை நடிகர் விஜய் துாண்டுகிறார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அதிகளவிலான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்குத் தேர்வாகி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் விஜய் சேர்ந்து, அரசியல் செய்வதைக் கண்டிக்கிறோம்.
மாணவர்களிடம் தனது திரைப்பட கவர்ச்சியால் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தெரிவித்து மாணவர்களை தவறாக திசை திருப்புகிறார். மாணவர்களிடையே அரசியல் செய்வதை விஜய் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications