புது டுவிஸ்ட் இருக்குதா..விஜய் கூட விஜயகாந்த் கட்சி கூட்டணி? விஜயபிரபாகரன் போட்டாரு பாருங்க கண்டிஷன்
மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறுகையில் " விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், விஜயகாந்த் 2005 இல் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்று 12 சதவீத வாக்குகளை பெற்று பின்னரே கூட்டணி வைத்தார். விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.
தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம். அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். தற்போதைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என கூற முடியாது. தேர்தலுக்கு முன்னர் எதுவும் மாறலாம், சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடு மாறும்.
அதிமுகவுக்குள் நிலவும் பிரச்சினைகளை சரி செய்வார்கள், அனைவரையும் ஒன்றிணைப்பது தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பார்கள். பொது செயலாளர் என்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னார்கள் போட்டியிட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன்" என கூறினார்.
கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றி கழகம், அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்," விஜய் எங்கள் வீட்டு பையன் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. சினிமா வேறு அரசியல் வேறு. இதை விஜயிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறேன். சினிமா துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் அதை நாம் பாராட்ட வேண்டும்.
என்ன சாதிக்கப் போகிறார் என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க காத்திருக்கிறோம். அதே நேரத்தில் விஜய் அறையில் அமர்ந்து பேசுவதை விட்டுவிட்டு வெளியே வரவேண்டும். மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications