செளராஷ்டிரா மக்களின் ஆதரவு.. மதுரை அரசியலே மொத்தமாக மாறிப்போச்சு.. தவெக எழுச்சியின் பின்னணி!
மதுரை: மதுரையில் செளராஷ்டிரா சமூக வாக்குகளை தவெக வேட்பாளர்கள் மொத்தமாக அறுவடை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை தெற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஆகிய தொகுதியில் கணிசமாக வசிக்கும் செளராஷ்டிரா சமூக மக்கள், தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக 71 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதில் மதுரையில் மட்டும் 7 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றிருக்கின்றனர்.

மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கோபிசன் 17 சுற்றுகள் முடிவில் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கல்லணை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும், மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
மதுரையில் இந்த தொகுதிகளில் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். மதுரையின் நகர்ப் புறங்களில் சுமார் 14 லட்சம் செளராஷ்டிரா மக்கள் வசிக்கிறார்கள். இதனால் செளராஷ்டிரா சமூக வாக்குகள் மொத்தமாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற கோபிசன் செளராஷ்டிரா தான்.
அவர் தனது பிரச்சாரத்தின் போதும் செளராஷ்டிரா மொழியில் பேசி வாக்கு சேகாரித்தார். அதேபோல் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகம் வசிக்காத திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த சில தேர்தல்களாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த செளராஷ்ரா மக்கள், இம்முறை விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனால் மதுரையின் அரசியலே மொத்தமாக மாறி இருப்பதாக தெரிகிறது. இதனால் மதுரையில் வரும் காலங்களில் செளராஷ்டிரா சமூக மக்களுக்கும் ஒவ்வொரு கட்சிகளும் பிரதிநிதித்துவம் அளிக்கும் சூழல் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இது மதுரை மக்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
-
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications