Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கில்லி படத்தில் செய்ததை போல.. மதுரை மண்ணை பார்த்ததும் விஜய் செய்த செயல்.. பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மண்ணிற்கு வருகை தந்த நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே விமானத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினார். இதனை பார்த்து அங்கிருந்த தவெக நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. கில்லி படத்தில் சென்னையில் இருந்து கபடி விளையாடுவதற்காக விஜய் மதுரைக்கு ரயிலில் வருவார். அப்போது விஜய் ரயிலில் இருந்து மதுரை மண்ணில் குதித்து தான் இறங்குவார் என்று ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முன்பு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை பார்த்ததும் ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர். விஜய்யும் பிரச்சார வேனில் ஏறி சிறிது நேரம் தொண்டர்களை நோக்கி கையசைத்தார். முன்னதாக விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது உற்சாகத்துடன் விஜய் செய்த செயல் டிரெண்ட் ஆகியுள்ளது. பலரும் வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

vijays-reaction-while-arriving-in-madurai-like-he-did-in-the-movie-ghilli-video

கோவையில் உற்சாக வரவேற்பு

நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தான் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் எனது கடைசி படம் என்றும், அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும் விஜய் கூறியிருந்தார். தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை விஜய் படிப்படியாக செய்து வருகிறார்.

மற்றவர்கள் கூறும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், தன் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பிசுறு தட்டாமல் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் தான் கோவையில் கடந்த 26 ஆம் தேதி பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டம் நடத்தினார். இதற்காக கோவை வருகை தந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய விஜய்க்கு கோவை தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

விஜய் வருகையில் அன்றைய தினம் கோவை விமான நிலையமே ஸ்தம்பித்து போனது. தொடர்ந்து ரோடு ஷோ நடத்தினார். ரோடு ஷோவின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் குவிந்து விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தான் ஜனநாயகன் படத்தில் நடத்தி வரும் விஜய், கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு செல்வதற்காக இன்று மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனால் மதுரை விமான நிலையம் முன்பு இன்று காலையில் இருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் குவியத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல அங்கு தொண்டர்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டே இருந்தது. மற்ற பயணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இதனால் மற்ற பயணிகளை வேறு வழியில் செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே விஜயும் கோவையில் நடந்தது போல் இருக்கக் கூடாது என்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போதே பத்திரிகையாளர்களை சந்தித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குலுங்கிப்போன மதுரை

தொண்டர்கள் யாரும் பின்னால் வர வேண்டாம். பைக்கில் நின்று கொண்டு வருவது, ஹெல்மெட் அணியாமல் வருவதையெல்லாம் பார்க்க மனதிற்கு பதற்றமாக இருக்கிறது எனவே யாரும் என் காரை பின் தொடர வேண்டாம். பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறியிருந்தார். இதன் பின்னர் மதுரை விமான நிலையம் வந்த விஜய்க்கு, அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பூக்கள் தூவியும், ஆரத்தி காண்பித்தும் வரவேற்றனர்.

விஜய் வந்ததும் ஆரவாரம் செய்தனர். இதனால் மதுரை குலுங்கிப்போனது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். விஜய் தொண்டர்களை கடந்து அங்கிருந்து வெளியில் செல்லவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து விஜய்யின் வாகனத்தை வேகமாக செல்ல வைப்பதற்காக மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து விஜய் கொடைக்கானல் புறப்பட்டார்.

கில்லி திரைப்பட காட்சி போல..

முன்னதாக விஜய் மதுரை விமான நிலையம் வந்தடைந்ததும், விமானத்தில் இறங்கும் போது நடிகர் விஜய் உற்சாகத்துடன் செய்த செயல் இணையத்தில் டிரெண்ட் ஆனது. பலரும் இந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் விமானத்தில் இருந்து விஜய் படியில் இறங்கி வருகிறார். அப்போது கடைசியாக தரையில் கால் வைக்கும் போது, நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே கீழே குதித்தார். குதித்துவிட்டு வெற்றி சிம்பளை கையினால் காட்டினார். இதனை அங்கிருந்த நிர்வாகிகள் பார்த்ததும் உற்சாகமடைந்தனர்.

விஜய்யின் தொண்டர்களும் இதனை கில்லி படம் மற்றும் மதுரை படத்தோடு ஒப்பிட்டு கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். கில்லி படத்தில் கபடி மேட்ச் விளையாடுவதற்காக சென்னையில் இருந்து ரயிலில் மதுரை வருவார். அப்போது மதுரை மண்ணில் கால் வைக்கும் போது தரையில் குதிப்பார். இதனை வைத்து மீண்டும் விஜய் மதுரை மண்ணில் கால் வைப்பதை அந்த படத்தோடு கம்பேர் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் தலைவர் ரொம்ப உற்சாகத்தோடு இருக்கிறார் போல என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+