Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே இப்படி எங்கும் நடந்தது இல்லை.. மதுரையில் நின்று சீறிய எடப்பாடி பழனிசாமி!

இந்தியாவிலேயே எங்கும் வாக்காளர்களை அடைத்து வைத்தது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது ஆதரவாளர்களும் இந்த பொதுக்குழுவில் நீக்கப்பட்டனர். இருப்பினும், இந்த பொதுக்குழுக் கூட்டமே செல்லாது என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு முதலில் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதிமுகவினர் உற்சாகம்

அதிமுகவினர் உற்சாகம்

இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

திருமண விழாவில் இபிஎஸ் பேச்சு

திருமண விழாவில் இபிஎஸ் பேச்சு

இந்த நிலையில் திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்பி உதயகுமார் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின், திருமண விழாவின் உற்சாகம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. இந்த நிலையில் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது நடக்கும். வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான். அதிக இளைஞர்கள் இருக்கும் கட்சியும் அதிமுக தான்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அதிமுகவின் வீரத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா கோயிலில் வேண்டி இருந்தேன். அது நிறைவேறியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை. மக்களின் ஏழ்மையை மையமாக வைத்து, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக மக்களை கொட்டகையில் அடைத்து வைக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைத்து தரப்புக்கும் புகாரளிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவிலேயே யாருமில்லை

இந்தியாவிலேயே யாருமில்லை

வாக்காளர்களை அடைத்து வைப்பது மக்கள் விரோத செயல். அதனை திமுகவினர் செய்து வருகிறார்கள். முதலில் திருமங்கலம் ஃபார்முலா. இன்று இரண்டாவதாக மக்களை அடைத்து வைக்கும் ஃபார்முலாவை உருவாக்கி இருக்கிறார்கள். வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்ததில்லை.

அதிமுகவுக்கு பயமில்லை

அதிமுகவுக்கு பயமில்லை

மக்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதித்தோம். அதுதான் ஜனநாயகம். ஆனால் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அடைத்து, தேவையானவற்றை செய்து கொடுத்து சாப்பாடு போடுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்கு மட்டும் அதிமுகவுக்கே போடுவார்கள். வாக்காளர்கள் மீது திமுகவுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் தான் வாக்காளர்களை அடைத்து வைக்கிறார்கள். அதிமுகவுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களை அடைத்து வைப்பதால், கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+