பாஜக தலைமை சரியான முடிவை எடுக்கும்.. ஓபிஎஸ் ஆக்ஷனை பொறுத்திருந்து பாருங்க.. ரவீந்திரநாத் பரபர!
ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மதுரை : பாஜக அதிமுக இடையேயான மோதல் போக்கு குறித்துப் பேசியுள்ள ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்.பியுமான ரவீந்திரநாத், பாஜக தலைமை சரியான முடிவை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவை பொறுத்தவரை ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த கொள்கையை கடைபிடித்தால் தான் கட்சிக்கு நல்லது எனக் கூறியுள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்குள் சலசலப்பு
பாஜகவின் ஐடி விங் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து பாஜகவினர் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருவது இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சியில் இருந்தே ஆளைத் தூக்கும் அதிமுகவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வந்தனர். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் மகன்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பேசியுள்ளார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக விவகாரம் பற்றி செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றிற்கு ஓபி ரவீந்திரநாத் பதில் அளித்தார்.

அதிமுக எம்.பி
அதிமுக, எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்ட சூழலில் உங்கள் நிலை என்ன என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத், நான் அதிமுக சார்பில் தான் வெற்றி பெற்றேன். 40 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே எம்.பி நான் மட்டும் தான். இரட்டை இலையை வெற்றிமுகத்திற்கு கொண்டு செல்ல வைத்தவர்கள் தேனி தொகுதி மக்கள். இன்று இரட்டை இலை எந்த நிலைமைக்குச் சென்றுள்ளது என்பது மக்களுக்கு தெரியும் எனத் தெரிவித்தார்.

பாஜக தலைமை
பாஜக அதிமுக இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அந்தந்த கட்சிகளின் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். பாஜகவின் தலைமை சரியான முடிவு எடுக்கும் என நினைக்கிறேன். ஆனால் அதிமுக தலைமை சரியான முடிவு எடுக்குமா என்பது தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வெய்ட் அண்ட் சீ
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த ஈபிஎஸ் தயாராகி வரும் சூழலில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவீந்திரநாத், அதனை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுகவை பொறுத்தவரை ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த கொள்கையை கடைபிடித்தால் தான் கட்சிக்கு நல்லது எனத் தெரிவித்தார்.

உள்ளுக்குள் துடிக்கிறாங்க
ஓபிஎஸ்ஸிடம் இருப்பது கட்சி அல்ல, அது மளிகை கடை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து பதில் அளித்த ரவீந்திரநாத், ஜெயலலிதாவிற்கு இக்கட்டான நிலை வந்த போது யாரிடம் முதலமைச்சர் பதவி கொடுத்தார் என ஜெயக்குமாருக்கு தெரியுமா? 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். அவரை ஜெயக்குமார் இப்படி பேசலாமா? ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர் ஓபிஎஸ். ஜெயலலிதா இல்லை என்ற காரணத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் உள்ளுக்குள் துடித்துக் கொண்டுள்ளார்கள். அது காலம் வரும்போது விரைவில் வெளிப்படும் எனத் தெரிவித்தார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications