வைகை அணையில் நீர் திறப்பு.. மகிழ்ச்சி வெள்ளத்தில் பூர்வீக முதல் கண்மாய் பாசன விவசாயிகள்!
மதுரை: இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று வைகை அணையிலிருந்து கண்மாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் முலம் 6,005 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.
201 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.13 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 292 கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வரும் 6 நாட்களுக்கு தினசரி 400 கன அடி வீதம் 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தற்போது மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நீர் நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications