எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உயிரை கொடுப்போம்.. அட அண்ணாமலையா இது
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. திமுக கூட்டணி 2026 தேர்தலிலும் தொடர்கிறது. மறுபக்கம் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளனர். தற்போதுவரை அந்த கூட்டணியில் வேறு பெரிய கட்சிகள் உறுதியாகவில்லை. இதனிடையே அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஆட்சி உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் அதிமுக நிர்வாகிகளில் பலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல பாஜகவிலும் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அதிமுக கூட்டணியின் உடன்பாடு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் கருத்துகள் தொடர்ந்து அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் செல்லும் இடம் எல்லாம் எடப்பாடியை முதல்வராக்குவோம் என பேச தொடங்கியுள்ளார்.

பாஜகவில் கருத்து வேறுபாடா
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: "அண்ணாமலை இந்தக் கட்சியின் ஒரு தொண்டன். சாதாரண தொண்டனாக இருப்பதில் எனக்கு பெருமை. கட்சியில் எங்களுக்குள் 1,008 விஷயங்கள் இருக்கலாம். 2026 தேர்தலில் இப்படி செல்லலாம், 2031 அப்படி செல்லலாம் என்று எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
தலைவர்கள் ஒருங்கிணைந்து 2026 தேர்தலுக்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று சென்னையில நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறிவிட்டோம். அதன் பிறகு அதை பின்பற்றுவது கட்சிக்கு நல்லது. அதன்படி நான் செல்கிறேன்.
இதுதான் எங்கள் முடிவு
எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் தொண்டனாக வேலை செய்யும்போது, கட்சியின் முடிவு எனக்கு வேத வாக்கு. பூத் கமிட்டி கூட்டத்தில் அதைத்தான் வெளிப்படுத்தினேன். 68,000 பூத்களில் கடுமையாக உழைக்கிறார்கள். யாருக்காக உழைக்கிறார்கள். 68,000 பூத்களிலும் ஒரு தலைவர், 12 துணை தலைவர்கள் வீதம் 10 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஒரு தெளிவு தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி எதற்கு உள்ளது, நம் முதலமைச்சர் வேட்பாளர் யார், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை தலைவர்கள் விளக்க வேண்டும். இதில் விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துவிட்டார். இதை எங்கள் தேசிய தலைவர் நட்டாவும் உறுதிபடுத்திவிட்டார்.
பழனிசாமிக்கு உயிரை கொடுப்போம்
ஓரணியில் திரள்வது பாஜகவின் இலக்கணம். அதிமுக தொண்டர்கள், தலைவர்கள் பாஜகவை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்க மாட்டார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது. எங்கள் தலைவர்கள் எடுத்த முடிவின்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாஜகவினர் உயிரை கொடுத்து பணியாற்றுவோம்.
அதேபோல அதிமுகவினரும், பாஜக வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் அவர்களின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். அதுதான் பரஸ்பர மரியாதை. பாஜக எவ்வளவு தொகுதிகளில், எங்கு நிற்கிறது என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முடியும். அதற்கு பாடுபடுவோம்.
விஜய் சண்டை
திமுகவுக்கும் - தவெகவுக்கும் போட்டி என்று விஜய் சொல்கிறார். அப்படி சொல்லவில்லை என்றால் நீங்கள் மதிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார். 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர தயாராகிவிட்டது. மக்கள் மனதில் நாங்கள் வந்துவிட்டோம். விஜய் அவர் கட்சி வளர்ச்சிக்காக அப்படி சொல்கிறார். நல்ல சண்டை நல்லதுக்கு தான்." என்றார்.
-
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம்












Click it and Unblock the Notifications