மாஸாக மாற போகும் மதுரை.. படுவேகமாக நடக்கும் பணிகள்! A டூ Z இனி எதுக்கும் பிரச்சினை இல்லை.. செம
மதுரை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரை ரொம்பவே சீக்கிரம் வேற லெவலில் மாறப்போகிறது. இதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. சென்னைக்கு அடுத்து டாப் நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. மேலும், அதிகளவில் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு நகராக மதுரை இருக்கிறது.
இப்படி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை இருந்தாலும், இங்கு நகரத்திற்குத் தேவையான வசதிகள் போதியளவில் இல்லை என்பது பெரிய குறையாகவே இருந்து வருகிறது.

மதுரை:அதாவது மதுரை நகரில் நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற மால்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் குறைவாகவே இருக்கிறது. இது சுற்றுலாத் துறை அடுத்த வளரும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரைச் சுற்றுலாத் துறையால் பட்டியலிடப்பட்டுள்ள 38 இடங்களில் 80% கோயில்கள் ஆகும்.. மக்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையிலான இடங்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2,630 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 18 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நகரத்திற்கு வந்துள்ளதாகச் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 5% அதிகமாகும்.
மீனாட்சி கோயில், கள்ளழகர் கோயில் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களை தவிர, பட்டியலிடப்பட்ட 38 சுற்றுலாத் தலங்களில் ராஜாஜி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, வண்டியூர் தொட்டி, குட்லாம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் இரண்டு அணைகள் உள்ளன. இதில் குட்லாம்பட்டி நீர்வீழ்ச்சி தற்போது சீரமைப்புக்காக மூடப்பட்டுள்ளது.

என்ன தேவை: இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த நவீன் என்பவர் கூறுகையில், "மதுரையில் பூங்காக்கள் போன்ற சில நகர்ப்புற பொழுதுபோக்கு இடங்கள் குறைவாகவே இருக்கிறது. இதனால் இருக்கும் ஓரிரு இடங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நகரின் அனைத்து மண்டலங்களிலும் இதுபோன்ற பொழுதுபோக்கு பகுதிகளை அதிகம் அமைக்க வேண்டும். இதில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
மேலும் இதுபோன்ற இடங்கள் சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளுக்குக் கைகொடுக்கும்... ஏனெனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். தற்போது, மதுரை நகருக்குக் கோயில்களுக்காக மட்டுமே வருகிறார்கள். பொழுதுபோக்கு என்று வரும்போது அவர்கள் அண்டை மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

என்ன தீர்வு: இப்படியொரு பிரச்சினை இருப்பது தங்களுக்குத் தெரியும் என்றும் இதற்கான தீர்வை எட்டும் பணிகளிலேயே ஈடுபட்டு வருவதாகவும் மதுரை கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகின்றனர். நகரில் மேலும் மூன்று பூங்காக்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும், இடத்தை இறுதி செய்வதில் சற்று தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், டான் அமைப்பின் உதவியுடன் மண்டலம் 1இல் உள்ள இரண்டு நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25 இடங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதில் 17 இடங்களில் ஏற்கனவே பணிகள் நிறைவடைந்துவிட்டன. வனத்துறையின் உதவியுடன் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வருவதாகக் கூறும் அவர்கள், வண்டியூர் குளம், பூங்கா, நடைபாதையுடன் செம்மைப்படுத்தப்படுகிறது என்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் அதிக பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இடங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வனப்பகுதி: மண் சரிவு காரணமாக வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் உள்ள தாடகை நாச்சியார் அருவி மூடப்பட்டுள்ளது. அதைச் சீரமைக்கும் பணிகளையும் விரைவில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி கிடைத்தால் உடனடியாக சீரமைப்பு பணிகளை முடிக்க ரெடியாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்லுயிர் வாழும் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்திற்கு இயற்கை சார்ந்து சுற்றுலா செல்வோரை அதிகம் ஈர்க்க முடியும்
மேலும், ஆண்டுதோறும் அதிக அளவில் புலம்பெயர்ந்த பறவைகள் வரும் சம்மதம் மற்றும் வண்டியூர் குளங்களைச் சீரமைத்து அவற்றைப் பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
-
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications