அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்னாச்சு? தென் மாவட்ட முதல்வர் நிகழ்ச்சியில் ஆப்சென்ட்! பின்னணி இது தான்!
மதுரை: முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்ட தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொள்ளாதது கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக அமைந்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் மதுரை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் ஐ.பெரியசாமி விமான நிலையத்தில் வரவேற்றார். அதன் பிறகு முதல்வர் கான்வாயில் பயணித்து அவருடன் தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கார் திண்டுக்கல்லை நோக்கி சீறியது.

முதல்வர் நிகழ்ச்சிகள்: திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் இரவு ஓய்வெடுத்துவிட்டு காலை மதுரை வந்துவிடுவார் என லோக்கல் நிர்வாகிகள் நினைத்தனர். ஆனால் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, மருதிருவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, பசும்பொன் தேவர் குருபூஜை, என முதல்வர் ஸ்டாலின் நேற்று பரபரப்பாக பங்கேற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆப்செண்ட்.
தென் மாவட்ட திமுக: தென் மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக திகழும் அமைச்சர் ஐ.பெரியசாமி முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளானது. இதனிடையே நாம் இது பற்றி விசாரித்ததில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடல்நலம் சரியில்லாதது காரணம் என தகவல் கிடைத்தது. அடிக்கடி லோ பிரஷர் வந்துவிடுவதால் அதிகமாக அவரால் பயணங்கள் செய்ய முடிவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அவர் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சிலவற்றால் வயிறு உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டது.
பயணங்களை தவிருங்கள்: இதனால் தான் அமைச்சர் ஐ.பெரியசாமியால் பயணங்கள் மேற்கொள்ள முடிவதில்லை என்றும் அவரது உடல்நலனை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலினும் தன்னுடன் பசும்பொன் வராவிட்டாலும் பரவாயில்லை ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாலேயே அவர் திண்டுக்கல் வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் ஐ.பெரியசாமியின் இடத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் முதல்வருடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications