எனது முடிவு அப்படியும் இருக்கலாம்... இப்படியும் இருக்கலாம்... எதற்கும் தயாராக இருங்க -மு.க.அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனது அடுத்தக் கட்ட அரசியல் முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் என ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் மு.க.அழகிரி.

Recommended Video

    மதுரை: ஸ்டாலின் ஒரு துரோகி... முதலமைச்சராக முடியாது... கொதித்த மு.க அழகிரி!

    கட்சி தொடங்குவேனா தொடங்கமாட்டேனா என்பது தனக்குத் தெரியாது என்றும் ஆனால் தாம் எந்த முடிவை எடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார் மு.க.அழகிரி.

    இதன் மூலம் அவர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது.

    என்ன முடிவு?

    என்ன முடிவு?

    திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.அழகிரி, தனது அடுத்தக் கட்ட அரசியல் முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அழகிரி நன்றி

    அழகிரி நன்றி

    இதன் மூலம் தனிக்கட்சி தொடங்கினாலும் தொடங்கலாம் அல்லது பாஜகவில் இணைந்தாலும் இணையலாம் என்பதை அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். தாம் எந்த முடிவை எடுத்தாலும் என்னுடன் இருப்பீர்களா என கூட்டத்தை நோக்கி அழகிரி வினவ, எல்லோரும் கோரஸாக உங்களுடன் தான் நாங்கள் என முழக்கமிட்டனர். இதைக்கேட்டு உற்சாகமடைந்த மு.க.அழகிரி உங்கள் பாதங்களை தொட்டு நன்றி கூறிக்கொள்கிறேன் என அவர்களிடம் தெரிவித்தார்.

    பரிந்துரை

    பரிந்துரை

    முன்னதாக பேசிய அவர், தன்னை புகழ்ந்து தனது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது ஒரு குற்றமா என்றும் தனக்கு ஸ்டாலின் துரோகம் செய்தது ஏன் எனத் தெரியவில்லை எனவும் கூறினார். துணை முதலமைச்சர் பதவி, பொருளாளர் பதவியை தம்பிக்கு கொடுங்கள் என கருணாநிதியிடம் பேசியவர் தாம் எனத் தெரிவித்தார்.

    தமிழக அரசியல்

    தமிழக அரசியல்

    மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு சொல்லும் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மு.க.அழகிரியின் அரசியல் முடிவு வரும் 30-ம் தேதி அவரது பிறந்தநாளன்று அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+