செயல்படாத அரசாக உள்ளது.. எப்போது தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.. டிடிவி தினகரன்
மதுரை: தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் திமுக நிறைவேற்றாமல் செயல்படாத அரசாக உள்ளது என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி குறித்து டிசம்பர் - ஜனவரியில் நிலையான முடிவு எடுப்போம். கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள்...

மூன்று வாய்ப்புகள் உள்ளதாக நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆளும் பாஜக கூட்டணியில்... பிரதமர் வேட்பாளர் சொல்ல வேண்டும் அதை சொல்லித்தான் வாக்கு கேட்க வேண்டும் என்ற பட்சத்தில் தமிழ்நாட்டு மக்கள் அதுபோன்ற ஒரு நிலைப்பட்டில் இருப்பதால் ஒன்று காங்கிரஸ் கூட்டணி அல்லது பாஜக கூட்டணி... நீங்கள் கேட்பீர்கள்.. காங்கிரஸ் திமுகவோடு இருக்கிறது என்று..
திமுக மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பயந்து கொண்டு இருக்கிறது. காங்கிரசை கூட்டணியில் இருந்து திமுக கழற்றி விட்டால் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாய்ப்புகளை சொல்கிறேன். அப்படி ஒரு நிலை என்றால் தனித்து போட்டியிடுவோம்... அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்ற நிர்பந்தம் தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என பேசப்படுவதாக கேட்கிறீர்கள்..
யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. ஊடகத்தில் பார்க்கிற.. கற்பனையான தகவலாக கூட இருக்கலாம். ஊர்ஜிதமான தகவலாக இருக்கும் வரை அது குறித்து நாம் பேசுவது சரியாக இருக்காது. இனி எப்போது தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படாத அரசாக திமுக இருக்கிறது. எனவே இனி திமுக ஆட்சி வராது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழக ஆளுநர் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டிடிவி தினகரன் கூறியதாவது: - பெண்கள் ஆண்கள் சமம் அப்படி என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு காரணம் சமூக நீதியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது செயல்பாடுகளால் தான். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை.
சாதி சமய வேறுபாடுகள் இல்லை. படிப்பிலும் சரி தொழில் செய்வதிலும் சரி பிறப்பால் எந்த பிரிவினையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஆண்களும் பெண்களும் இரு கண்கள் என்ற அளவிற்கு சமுதயாம் வளர்ந்துள்ளது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தான் இருக்கிறது. அங்கு ஒன்றும் இங்கும் என்று தனி ஒருவரின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் கூறுவது சரியாகாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications