ஹீரோ - மதிமுக - பாஜக - திமுக - இப்போ அதிமுக.. பிடிஆரிடம் மோதிய மதுரை வேட்பாளர் சரவணன்! யார் இவர்?
மதுரை: அதிமுக சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்

இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜே. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு தென்சென்னை தொகுதி அளிக்கப்பட்டு உள்ளது.
மதுரை: அதிமுக சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதில் திமுக கூட்டணியில் மதுரையில் சிபிஎம் சார்பாக தற்போது உள்ள எம்பி சு வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் சரவணன் சினிமா துறையில் இருந்து வந்தார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து அதே படத்திலும் இவர் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக செல்லாத நிலையில் அரசியலுக்குள் நுழைந்தார். அரசியலுக்கு வந்து முதலில் மதிமுகவில் இருந்தவர் அதன்பின் பாஜகவிற்கு சென்றார். அங்கிருந்து அப்படியே திமுகவில் இணைந்தார்.
திமுகவில் எம்எல்ஏவாகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனார். ஆனால் பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பாஜகவில் இணைந்தார்.
அதன்பின் ராணுவ வீரர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த பிடிஆர் வந்த அவரின் வாகனத்தில் செருப்பு வீசிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டார். இதில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினார்.
அதன்பின் இவர் மீண்டும் திமுகவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் சேர்ந்து மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கே கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக சு வெங்கடேசன் வென்றார். அதற்கு முன் அதிமுக சார்பாக கோபாலகிருஷ்ணன் வென்றார்.
இப்போது சு வெங்கடேசன் மற்றும் சரவணன் இடையே இங்கே போட்டி நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications