மதுரை மேயர் யார்? முட்டிமோதும் திமுக முக்கியப் பிரமுகர்கள்! பரபரக்கும் தூங்கா நகரம்!
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
ரோகிணி, இந்திராணி பொன்வசந்த், விஜய மவுசமி, வாசுகி சசிகுமார், ஆகிய நால்வரில் ஒருவர் மதுரை மேயராக வரக்கூடும் எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கை ஓங்கும் எனத் தெரிகிறது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக சார்பில் வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர்களில் 4 பேர் அந்த பதவியை கைப்பற்றி காய் நகர்த்தி வருகிறார்கள். திமுக பகுதிச்செயலாளரும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினருமான பொம்மதேவனின் மகள் ரோகிணி மதுரை மேயர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். அரசியலுக்கு புதுவரவான இவருக்கு மேயர் பதவியை பெற்றுக்கொடுக்க அவரது தந்தையும் மதுரை திமுகவின் சீனியர் நிர்வாகியுமான பொம்மதேவன் முயற்சித்து வருகிறார்.

இந்திராணிக்கு வாய்ப்பு
இதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் வழக்கறிஞர் பொன் வசந்தின் மனைவி இந்திராணிக்கும் மதுரை மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்பதோடு மக்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையும் இந்திராணி மீது உண்டு. இதனால் அமைச்சர் பி.டி.ஆர். சிபாரிசில் இந்திராணிக்கு மேயர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விஜய மவுசமி
இதனிடையே திமுகவின் மூத்த நிர்வாகியும் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜய் மவுசமியும் மேயர் பதவிக்கான போட்டியில் பிரதான இருக்கிறார். மருமகளை மேயராக பொன்.முத்துராமலிங்கம் இப்போதே அறிவாலயத்தில் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். இதனால் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டி வலுத்து வருகிறது.

அமைச்சர் உறவினர்
மேற்கண்ட இவர்களோடு வாசுகி சசிகுமார் என்ற திமுக பெண் கவுன்சிலருக்கும் மதுரை மாநகராட்சி மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் உறவினர் என்பதால் வாசுகி சசிகுமாரும் தனது பங்குக்கு மேயர் பதவியை கைப்பற்ற லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் மூர்த்தி, பிடிஆர் என இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் மேயரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அமைச்சர் பிடிஆரின் கையே ஓங்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications