"குட்டை பாவாடை" பரமேஸ்வரி.. கரகாட்டக்காரின்னா மிரட்டறதா? கவர்ச்சியா? போலீசுக்கு ஓடிய பெண்.. என்னாச்சு
மதுரை: கரகாட்டக்கார புகழ் பரமேஸ்வரி மீது புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. ஆனால் அத்தனை புகார்களையும் மறுத்துள்ள பரமேஸ்வரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, மதுரை எஸ்பி ஆபீசில் புகார் மனு தந்துள்ளார்.. யார் இந்த பரமேஸ்வரி?
மதுரையை சுற்றி இருக்கும் பல பகுதிகளில் பரமேஸ்வரி என்றாலே படுகுஷியாகிவிடுவார்கள்.. காரணம், தன்னுடைய கரகாட்டத்தில் ஆண்கள், பெண்ள், குழந்தைகள் என அத்தனை பேரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர்.
பரமேஸ்வரி கரகாட்டம் ஆட வருகிறார் என்றாலே அந்த பகுதியில், சினிமா நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளை போல பிரம்மாண்டமான கட்அவுட்களை வைத்துவிடுவார்களாம்..

குட்டை பாவாடை: கரகாட்டத்திற்கே உரிய குட்டை பாவாடை, பல வண்ண மேல்சட்டையுடன் பரமேஸ்வரி வளைந்து நெளிந்து ஆடுவதை பார்க்க சுற்றுவட்டார கிராமத்தினரும் திரண்டு வருவார்களாம்.. 2 மணி நேரத்துக்கும் மேல் கரகாட்டம் ஆடுபவராம் பரமேஸ்வரி.. மேளக்காரர்கள் ஓயாமல் மேளத்தை அடிக்க, பரமேஸ்வரியின் கால்களும் ஓயாமல் ஆட, அதைபார்த்து கரவொலிகள் அதிர்ந்து கொண்டேயிருக்குமாம். கரகாட்ட கலை என்பது நம்முடைய பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் பாரம்பரிய கலையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றாலும், மாறிவரும் நவீனயுகத்தில், கரகாட்டம் என்பது அழிந்து போகுமோ என்றெல்லாம் கவலைகள் எழுகின்றன..
ஆனாலும், பரமேஸ்வரி போன்ற கலைஞர்கள் இந்த கலையை காலத்திற்கு ஏற்றவாறு கட்டிக்காத்து வருவது ஒருவகையில் நிம்மதியை தந்துவருகிறது.. மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி. பரம்பரையாக தாத்தா, பாட்டி, அம்மா என்று எல்லோரும் கரகாட்ட தொழிலில் ஈடுபட்டவர்கள்.. இவரது அப்பா மட்டும் கலையில் ஈடுபடாதவர்.. எம்ஏ பட்டதாரியாம்.. மகளையும், ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்துள்ளார்.. திருமணமும் செய்து வைத்திருக்கிறார்.. 2 குழந்தைகளுக்கு தாயான பரமேஸ்வரியின் கணவர், நோய் வாய்பட்டு இறந்துவிட்டார்.. அதன்பிறகு மொத்த குடும்ப பாரத்தையும் பரமேஸ்வரி சுமக்க வேண்டியதாயிற்று.

கரகாட்ட பரமேஸ்வரி: கற்ற கலைதான் இனி நமக்கு சோறு போடும் என்று நினைத்த பரமேஸ்வரி காலில் சலங்கையை கட்டி ஆடி வருகிறார். இந்நிலையில் பரமேஸ்வரி மீது போலீசில் திடீர் புகார்கள் சென்றுள்ளன.. அதேபோல அலங்காநல்லூரி காளீஸ்வரன் என்ற கரகாட்ட பப்பூனும் பரமேஸ்வரியின் ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பரமேஸ்வரி மீது மதுரை எஸ்பி அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். கரகாட்ட கலையை கெடுக்கும் வகையில் கவர்ச்சியாக பரமேஸ்வரி ஆடுவதாக புகார்கள் வெடித்துள்ளன.. அதேபோல, பரமேஸ்வரியும் அவர்கள் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளார்.. பரமேஸ்வரியை மணிமேகலை என்பவர் மிரட்டினாராம்.. இவர்தான் பரமேஸ்வரிக்கு தொழில் கற்று கொடுத்ததாக கூறுகிறார்கள்..
இதனிடையே, மதுரை எஸ்பி ஆபீசில் பரமேஸ்வரி ஒரு புகார் தந்துள்ளார்.. அதில், தன்னை சமூக வலைதனளங்கள் மூலமாகவும், போன் மூலமாகவும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.. இரு தரப்பிலுமான புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார், அது தொடர்பான விசாரணையை துவங்கி உள்ளனர்.. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரி சொன்னதாவது:

குடும்ப சூழல்: "எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு தம்பியும் இருக்கிறார். என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாயிற்று. எலெக்ட்ரீஷியனான என் தம்பியின் வருமானம் எங்களுக்கு பத்தாத நிலையில் நான் சம்பாதித்தே என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. நான் ஃபேஸ்புக், யூடியூப்களிலும் என்னுடைய டான்ஸை பதிவு செய்வேன்.. என் கரகாடத்தில் எந்த ஒரு ஆபாச நடனமும் இருக்காது. என்னுடைய நடன வீடியோக்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டதால் எனக்கு யூடூப் மூலமாகவும் கரகாட்ட புக்கிங் வரும். சமீபத்தில் சென்னையில் நடந்த ஐகான் விருதில் கலந்து கொண்டு விருதும் பெற்றேன்.
நான் வாட்ஸ்ஆப் செயலியில் பல கரகாட்ட குழுவில் இருக்கிறேன். என் தினசரி நிகழ்வின் நடன விடீயோக்களை அதில் பதிவு செய்வேன். இதனை பார்த்து என் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்ட சில நபர்கள் தினமும் என்ன தொலைபேசியில் அழைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.. நான் கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு அருகில் இருந்த சிறு சிறு ஊர்களுக்கு சென்று கரகாட்டம் ஆடுவேன். கொரோன காலத்தில் என் உறவிர்களிடம் முறைப்படி நன்கு கரகாட்டத்தில் உள்ள அனைத்து வித்தைகளையும் கற்றுகொண்டேன்.
இடையூறு: கொரோனா காலத்தில் நானும் என் குடும்பமும் வறுமையின் உச்சத்தை தொட்ட நிலையில் வெளியூர் சென்று கரகாட்டம் ஆடினால் தான் அதிகம் வருமானம் வரும் என்பதால் என் குழந்தைகளை என் தாயிடம் விட்டுவிட்டு சென்று வருவேன். இவ்வாறு என் கரகாட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் கஷ்டப்பட்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.. எனவே என்னுடைய வாழ்க்கையையும் என்னுடைய குழந்தைகளின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு மேற்கண்ட நபர்களைதடுத்தும் அழைத்து விசாரித்து எனக்கு எந்த வித இடையூறும் செய்யாமல் அவர்களுக்கு சட்டப்படி அறிவுரையும் வழங்கி தக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றே இன்று அளித்துள்ளேன் என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications