யார் அந்த மாஸ்டர்மைண்ட்? பிடிஆர் காரில் செருப்பு வீச்சு! கூட்டத்தை திரட்டிய "பிரமுகர்"! பரபர பின்னணி
மதுரை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய கும்பல் தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதையை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்.
லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து விமானம் மூலம் பிடிஆர் மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலைய வாசலில் பாஜகவினர் பலர் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த பிடிஆர்.. போலீசாரிடம்.. லட்சுமணன் உடல் அவரின் வீட்டிற்கு செல்கிறதே அங்கு போய் அஞ்சலி செலுத்தட்டும் தேவையில்லாத கூட்டம் ஏன் என்று கூறி உள்ளார். இதையடுத்து பாஜகவினரை அங்கிருந்த போலீசார் கலைத்து உள்ளனர்.

மோதல்
இதையடுத்து லட்சுமணன் வீட்டில் அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் போது பாஜகவினர் உள்ளே புகுந்து முன்னாள் நிற்க முயன்று உள்ளனர். அப்போது இது அரசு மரியாதையை செலுத்தும் இடம். கட்சிக்காரர்களுக்கு இடமில்லை என்று அங்கிருந்த போலீசார் கூறி உள்ளனர். இதனால் அண்ணாமலை உள்ளிட்டோர் காக்க வைக்கப்பட்டனர். இதன் காரணமாக கோபம் அடைந்த பாஜக நிர்வாகிகள் பிடிஆர் திரும்பி செல்லும் போது அவரின் காரில் செருப்பு வீசி தாக்கினர்.

தாக்குதல்
மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய கும்பல் தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றனர். லட்சுமணன் வீட்டில் இருந்து பிடிஆர் தனது அலுவலகம் நோக்கி சென்ற போதுதான் இந்த செருப்பு வீச்சு நடைபெற்றது. அப்போது அந்த பாதையில் பாஜகவினர் நின்று இருந்தனர். இவர்கள் திட்டமிட்டு முறையாக பிடிஆர் கார் மீது செருப்பு வீசி உள்ளனர். அவர் கார் சென்ற போது பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் காரின் மீது வேண்டுமென்றே விழுந்தார்.

திட்டமிடல்
அப்போதுதான் கார் ஸ்லோவாக செல்லும் என்று காரின் மீது விழுந்தார். இதனால் அவர் கார் உடனே நின்றது. அப்போது போலீசார் வந்து பாஜக நிர்வாகியை தூக்கி நகர்த்தினர். அப்போது உடனே பின் பக்கத்தில் இருந்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். நீங்கள் போய் விழுவுங்கள்.. நான் செருப்பை வீசுகிறேன் என்பது போல திட்டமிட்டு வீசி உள்ளனர்.

கைது
இந்த செருப்பு வீச்சில் தொடர்புடைய 6 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் இருந்த போலீசார்.. செருப்பு வீசிய நபர்களை பிடித்து இழுத்து அவர்களை அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர். அதன்பின் இவர்களை கைதும் செய்தனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தை திரட்டியது யார்? பாஜகவினர் இப்படி செருப்பு வீசும் அளவிற்கு திட்டம் போட யார் காரணம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணை
போலீசார் கைது செய்த 6 பேரிடமும் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. பாஜக மதுரை மாவட்ட நிர்வாகி கோலுலஜீத் பெயர் இதில் அடிபட்டு வருகிறது. பாஜக உள்ளூர் நிர்வாகியான அவர்தான் இந்த குறிப்பிட்ட கூட்டத்தை திரட்டியதாக கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் இவர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கோகுல்ஜீத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications