இதனால்தான், அதிமுகவை போற இடத்துல எல்லாம் துரத்தி அடிக்குறாங்க... கரு.பழனியப்பன்
Recommended Video

மதுரை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுகவினருக்கு மக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் இயக்குநர் கரு.பழனியப்பன் இன்று மதுரை சோலை அழகுபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களை கரு பழனியப்பன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். அந்த வகையில் தற்போது மதுரையில் எனது நண்பர் வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.
பொதுவாக எதிரி தோற்க வேண்டும் நினைப்போம். ஆனால் தற்போது உள்ள எதிரி படுபயங்கரமாக தோல்வி அடைய வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் செல்லும் இடங்களில் அதிமுகவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் தீமையின் பக்கம் நிற்காமல், நன்மையின் பக்கம் நிற்க வேண்டும்
தற்போது உள்ள வேட்பாளர் பட்டியலில் மிகச்சிறந்த வேட்பாளர் சு.வெங்கடேசன். திரைத்துறையை சேர்ந்தவர்கள் சிலர் கட்சி ஆரம்பித்து அதில் நிற்கிறார்கள். நான் கட்சி இல்லாததால் சு.வெங்கடேசனை ஆதரிக்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" இவ்வாறு கூறினார்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications