பெரியப்பா! பார்த்ததும் காலில் விழுந்த உதயநிதி! முத்தமிட்ட பெரியம்மா! அழகிரியை திடீரென சந்தித்தது ஏன்
மதுரை: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை திடீரென நேற்று இரவு சந்தித்தார். மதுரையில் இருக்கும் வீட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார்.
மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு மதுரையில் அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தொண்டர்கள் படை சூழ, ஏகோபித்த கரகோஷங்களுடன் உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின் - அழகிரி இடையே பெரிதாக பேச்சுவார்த்தைகள் இல்லை, நேரடியாக இவர்கள் சந்தித்துக்கொள்வது இல்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார்.

காரணம் என்ன?
இந்த சந்திப்பிற்கு என்ன காரணம் என்று திமுகவினர் தரப்பில் விசாரித்தோம். அவர்கள் சில முக்கிய தகவல்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அதன்படி உதயநிதி ஸ்டாலின் பொதுவாகவே தனது பெரியப்பா அழகிரியிடம் அன்பாக இருக்க கூடியவர். இவர்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்வது வழக்கம். பெரியப்பா என்னிடம் பாசமாக இருப்பார். அவர் மிகவும் எமோஷனலாக இருக்க கூடியவர். என்னிடம் அன்பாக பேசுவார் என்று உதயநிதி ஸ்டாலினே சில பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக இப்படி அழகிரியை போய் நேரில் பார்க்கிறார். அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு தயா அழகிரி வந்திருந்த நிலையில் அழகிரியை உதயநிதி பார்க்க முடியவில்லை. இதனால் இன்று மரியாதை நிமித்தமாகவே அழகிரியை உதயநிதி பார்த்ததாக கூறப்படுகிறது. விழா நாட்களுக்கு இவர்கள் போனில் மாறி மாறி வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை நேரடியாகவே வாழ்த்து சொல்லிவிடலாம் என்றுதான் உதயநிதி வந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர்
அதெல்லாம் போக அழகிரிக்கு லேசாக உடல்நிலை சரியில்லை, அவருக்கு கொஞ்சம் மன வருத்தமும் இருந்தது. அதனால்தான் உதயநிதி வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார் என்கிறார்கள். இது அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துமா? அழகிரி மீண்டும் எழுச்சி பெற இது வழி வகுக்குமா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுகின்றன. ஆனால் இது முழுக்க முழுக்க குடும்ப ரீதியான சந்திப்புதான் அரசியல் ரீதியாக இது எந்த விதமான மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றேதான் திமுக தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

உடல்நிலை
இந்த சந்திப்பில் அழகிரியை நேற்று பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் அப்படியே காலில் விழுந்தார். அழகிரியின் மனைவி காந்தி அழகிரி உதயநிதியை அருகில் அழைத்து அவரின் நெற்றியில் முத்தம் கொடுத்து வீட்டிற்குள் வரவேற்றார். அமைச்சராக முதல்முறை உதயநிதி வீட்டிற்கு வருவதால் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. குடும்ப அளவில் இந்த சந்திப்பு இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அரசியல் வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications